Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/திசையன்விளை டவுன் பஞ்.,சில் 20 ஓட்டுச் சாவடிகள்

திசையன்விளை டவுன் பஞ்.,சில் 20 ஓட்டுச் சாவடிகள்

திசையன்விளை டவுன் பஞ்.,சில் 20 ஓட்டுச் சாவடிகள்

திசையன்விளை டவுன் பஞ்.,சில் 20 ஓட்டுச் சாவடிகள்

ADDED : அக் 07, 2011 02:17 AM


Google News

திசையன்விளை : திசையன்விளை டவுன் பஞ்., உள்ளாட்சி தேர்தலில் 20 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.

திசையன்விளை டவுன் பஞ்., உள்ளாட்சி தேர்தல் வரும் 17ம் தேதி நடக்கிறது. இதில் இங்குள்ள 18 வார்டுகளில் 14 ஆயிரத்து 31 பேர் ஓட்டளிக்க உள்ளனர். இவர்களுக்காக 16 இடங்களில் அனைத்து வாக்காளர்களுக்கான ஓட்டுச் சாவடிகளும், 2 ஆண் வாக்காளர்களுக்கும், 2 பெண் வாக்காளர்களுக்கு மட்டுமான ஓட்டுச் சாவடியும் மொத்தம் 20 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.



இதில் 1,2,18வது வார்டுகளில் உள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் ராமகிருஷ்ணா துவக்க, மேல்நிலைப் பள்ளியிலும், 3வது வார்டு மடத்தச்சம்பாடு டி.டி.டி.ஏ. நடுநிலைப் பள்ளியிலும், 4,5,6 வார்டுகள் சமாரியா டி.டி.டி.ஏ. துவக்கப் பள்ளியிலும், 7வது வார்டு முஸ்லிம் துவக்கப் பள்ளியிலும், 8வது வார்டு, 9வது வார்டு, 10,15வது வார்டுகள் உலக ரட்சகர் மேல்நிலைப் பள்ளியிலும், 11வது வார்டு இந்து துவக்கப் பள்ளியிலும், 12,13வது வார்டுகள் செல்வமருதூர் இந்து துவக்கப் பள்ளியிலும், 14வது வார்டு குருகாரம் வி.வி.துவக்கப் பள்ளியிலும், 16வது வார்டு கீரைக்காரன் தட்டு டி.டி.டி.ஏ.நடுநிலைப் பள்ளியிலும், 17வது வார்டு சண்முகபுரம் பஞ்., யூனியன் துவக்கப் பள்ளியிலும் ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இத்தகவலை திசையன்விளை டவுன் பஞ்., தேர்தல் நடத்தும் அலுவலர் மகேந்திரன் தெரிவித்தார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us