Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/சுயதொழில் பொருட்கள் விற்க சந்தை ஏற்படுத்தி தரப்படும் : களக்காடு டவுன் பஞ்.,சுயேட்சை வேட்பாளர்

சுயதொழில் பொருட்கள் விற்க சந்தை ஏற்படுத்தி தரப்படும் : களக்காடு டவுன் பஞ்.,சுயேட்சை வேட்பாளர்

சுயதொழில் பொருட்கள் விற்க சந்தை ஏற்படுத்தி தரப்படும் : களக்காடு டவுன் பஞ்.,சுயேட்சை வேட்பாளர்

சுயதொழில் பொருட்கள் விற்க சந்தை ஏற்படுத்தி தரப்படும் : களக்காடு டவுன் பஞ்.,சுயேட்சை வேட்பாளர்

ADDED : அக் 07, 2011 02:17 AM


Google News

களக்காடு : 'சுயதொழில் பயிற்சிகள் மூலம் செய்த பொருட்களை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் விற்க சந்தை ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்படும்' என களக்காடு டவுன் பஞ்., தலைவர் பதவிக்கு போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் சுசீலா பாண்டியன் கூறி ஓட்டு சேகரித்து வருகிறார்.

களக்காடு டவுன் பஞ்.,தலைவர் பதவிக்கு போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் சுசீலா பாண்டியன் களக்காடு பகுதியில் பல இடங்களுக்கு சென்று ஓட்டு சேகரித்து வருகிறார். ஓட்டு சேகரிக்கும் இடங்களில் அவர் பொதுமக்களிடம் பேசியதாவது:-



''நான் கடந்த 35 ஆண்டுகளாக களக்காடு மற்றும் நெல்லை மாவட்டத்தில் 13 யூனியன்களில் சாதி, மத, இன வேறுபாடின்றி அடித்தள மக்களின் குழு மற்றும் தனிநபர் மேம்பாட்டிற்காக மத்திய, மாநில அரசுகளோடு இணைந்தும் சேவை நிறுவனங்கள் மூலமாக பல்வேறு உதவிகள் மற்றும் திட்டங்களை பெற்று நிறைவேற்றியுள்ளேன். நான் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால் டவுன் பஞ்., பகுதியில் பாலர் பள்ளிகள் அமைக்கப்படும். சுகாதார மேம்பாடு, தனிநபர் கழிப்பறைகள், பள்ளிகளில் கழிப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். குடிதண்ணீர் பிரச்னை தீர்க்க நடவடிக்கை எடுப்பேன்.



ஹெச்ஐவி எய்ட்ஸ் தடுப்பு மற்றும் பராமரித்தல், இளைஞர் குழு, ஒருங்கிணைப்பு குழுக்கள் அமைத்தல், வங்கி கடன் வசதி செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். சுய தொழில் பயிற்சி குழு மூலம் செய்த பொருட்களை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் சந்தைபடுத்தி விற்பனை செய்ய நடவடிக்கை எடுப்பேன்'' என்றார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us