Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/சொல்கிறார்கள்/சொல்கிறார்கள்

சொல்கிறார்கள்

சொல்கிறார்கள்

சொல்கிறார்கள்

PUBLISHED ON : அக் 08, 2011 12:00 AM


Google News
Latest Tamil News
பாத்திரத்தை பொறுத்தது உணவின் சுவையும், தரமும்!

தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தின், உதவி இயக்குனர் மீனாட்சி சுந்தரமூர்த்தி: இன்று பெரும்பாலானோர், சில்வர் பாத்திரத்தில் தான் சமைக்கின்றனர். இதில் சமைப்பதால் நன்மை, தீமை ஏதுமில்லை. வெண்கலப் பாத்திரத்தில் சமைத்த உணவால், உடல் சோர்வு நீங்கும். இதில் சமைத்த உணவுப் பொருட்களுக்கு, 'புட் பாய்சன்' ஆகும் வாய்ப்பு குறைவு என்பதால், இன்றும் கோவில்களில் சமைப்பதற்கு வெண்கலப் பாத்திரத்தை பயன்படுத்துகின்றனர்.

செம்புப் பாத்திரங்களில் சமைக்கும் உணவுகளை தொடர்ந்து உண்டால், ரத்தம் சுத்தமாகும். கண் பார்வைக்கு நல்லது. வயிறு தொடர்பான நோய்கள் நீங்கும். 'பெப்டிக் அல்சர்' இருப்போர் செம்புப் பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டால் நோய் நீங்கும். துளசி போன்ற மூலிகை இலையை நீரில் போட்டு, அதை இரவு முழுவதும் செம்புப் பாத்திரத்தில் வைத்து, காலையில் அருந்தினால் வெண் குஷ்டம் நீங்கும். இந்த தீர்த்தம், இருமல், சளி உள்ளிட்ட வைரல் தொற்றுகளையும் தடுக்கிறது. பெருமாள் கோவில்களில் துளசி தீர்த்தம் கொடுப்பதற்கு இதுவே காரணம். இரும்பால் ஆன பாத்திரங்களை, வறுப்பதற்கு பயன்படுத்தலாம். ஆனால், துவர்ப்பு சுவையுடைய பொருட்களை இரும்பு வாணலியில் சமைப்பதை தவிர்க்க வேண்டும். இதனால், உணவுப்பொருள் கறுப்பு நிறத்திற்கு மாறி, சுவையிலும் மாற்றத்தைக் கொடுக்கும். அலுமினியம், ஈயப் பாத்திரங்களை பயன்படுத்துவது உகந்ததல்ல. பல பாத்திரங்கள் இருந்தாலும், மண்பாண்டங்கள் தான் சமைக்க மிகச் சிறந்தவை. எவ்வித பின்விளைவுகளும் அற்றது. மண்பானையில் சமைத்த உணவு பல மணி நேரம் கெடாமல் இருக்கும்.நமக்கு இயற்கை, 'ரெப்ரிஜிரேட்டரே' மண்பாண்டங்கள் தான்!





      Our Apps Available On




      Dinamalar

      Follow us