Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/மாணவியிடம் செயின் பறித்த மாணவர்:விரட்டி பிடித்த ஆட்டோ டிரைவர்கள்

மாணவியிடம் செயின் பறித்த மாணவர்:விரட்டி பிடித்த ஆட்டோ டிரைவர்கள்

மாணவியிடம் செயின் பறித்த மாணவர்:விரட்டி பிடித்த ஆட்டோ டிரைவர்கள்

மாணவியிடம் செயின் பறித்த மாணவர்:விரட்டி பிடித்த ஆட்டோ டிரைவர்கள்

ADDED : அக் 08, 2011 01:07 AM


Google News
கோயம்பேடு:ஆடம்பர செலவு செய்வதற்கு பணம் இல்லாத தால், மாணவியிடம் செயின் பறித்து தப்பியோடிய தனியார் கல்லூரி மாணவரை, ஆட்டோ டிரைவர்கள் விரட்டி பிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.திருப்பூரைச் சேர்ந்தவர் சவுமியாத்திரி, 20. சென்னை அடுத்த கும்மிடிபூண்டியில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரி மாணவி. ஆயுத பூஜை விடுமுறையை கொண்டாடுவதற்காக, சில நாட்களுக்கு முன், தன் சொந்த ஊருக்கு சென்ற சவுமியாத்திரி, அங்கிருந்து, அரசு பஸ் மூலம், நேற்று காலை சென்னை கோயம்பேடு பஸ் நிலையம் வந்தார்.

பஸ்சில் இருந்து இறங்கி, தன் பையை தோளில் மாட்டிக்கொண்டு நடந்து சென்றபோது, டிப்-டாப்பாக உடையணிந்து கொண்டு அங்கு நின்றிருந்த வாலிபர், சவுமியாத்திரி கழுத்தில் அணிந்திருந்த ஐந்து சவரன் செயினை பறித்தார். அதிர்ச்சியடைந்த அவர், சுதாரித்துக் கொண்டு திருடன் திருடன் என்று கூச்சல் போட்டார். இதை, அங்கிருந்த ஆட்டோ டிரைவர்கள் கவனித்து, செயின் பறித்துக்கொண்டு ஓடிய வாலிபரை பின் தொடர்ந்து ஓடினர்.

பஸ் நிலையத்திலிருந்து, அந்த வாலிபர் வெளியேறாதபடி சுற்றி வளைத்தனர். அரை மணிநேரம் ஆட்டம் காட்டிய அந்த வாலிபரை, ஒரு வழியாக ஆட்டோ டிரைவர்கள் அமுக்கிபிடித்து, லேசாக 'கவனித்து' கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். குற்றப்பிரிவு போலீசார் விசாரணையில், செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர், கடலூர் மாவட்டம் ஆண்டிபாளையத்தைச் சேர்ந்த ஜோதிலிங்கம் மகன் அருண் ஜோதி, 20, என்பது தெரிந்தது.இவர், பூந்தமல்லியில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர். ஆடம்பர செலவு செய்வதற்கு பணம் இல்லாததால், செயின் பறிப்பில் ஈடுபட்டதாக, அவர் போலீசாரிடம் தெரிவித்தார். அருண்ஜோதியை கைது செய்த போலீசார், அவருக்கு வேறு ஏதேனும் செயின் பறிப்பு சம்பவங்களில் தொடர்புள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us