/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/வீரவநல்லூரில் மா.கம்யூ., வேட்பாளர் தீவிர பிரசாரம்வீரவநல்லூரில் மா.கம்யூ., வேட்பாளர் தீவிர பிரசாரம்
வீரவநல்லூரில் மா.கம்யூ., வேட்பாளர் தீவிர பிரசாரம்
வீரவநல்லூரில் மா.கம்யூ., வேட்பாளர் தீவிர பிரசாரம்
வீரவநல்லூரில் மா.கம்யூ., வேட்பாளர் தீவிர பிரசாரம்
ADDED : அக் 08, 2011 01:13 AM
வீரவநல்லூர் : வீரவநல்லூர் டவுன் பஞ்.,சில் மா.கம்யூ.,வேட்பாளர் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.வீரவநல்லூர் டவுன் பஞ்., உள்ளாட்சி தேர்தல் வரும் 17ம் தேதி நடக்கிறது.
இதனை முன்னிட்டு அதிமுக.,-திமுக.,-காங்.,- மா.கம்யூ., ஆகிய கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை பிரசார களத்தில் இறக்கி விட்டுள்ளனர். சுயேட்சை வேட்பாளர்களும் பிரசாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்தது முதல் இதுவரை மா.கம்யூ., கட்சி வேட்பாளர்கள் கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் வீடு வீடாக சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.டவுன் பஞ்.,தலைவர் பதவிக்கு போட்டியிடும் மா.கம்யூ.,வேட்பாளர் பழனிச்சாமி 1986 முதல் 5 ஆண்டுகள் பஞ்.,தலைவராக இருந்த காலத்தில் தான் செய்த சாதனைகளையும், மீண்டும் பஞ்.,தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால் என்ன செய்வேன் என்ற வாக்குறுதிகளையும் வாக்காளர்களிடம் கூறி ஓட்டு சேகரிக்கிறார்.


