/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/லயில் சுயேட்சைகளிடம் "டீலிங்' அரசியல் கட்சி வேட்பாளர்கள் மும்முரம்லயில் சுயேட்சைகளிடம் "டீலிங்' அரசியல் கட்சி வேட்பாளர்கள் மும்முரம்
லயில் சுயேட்சைகளிடம் "டீலிங்' அரசியல் கட்சி வேட்பாளர்கள் மும்முரம்
லயில் சுயேட்சைகளிடம் "டீலிங்' அரசியல் கட்சி வேட்பாளர்கள் மும்முரம்
லயில் சுயேட்சைகளிடம் "டீலிங்' அரசியல் கட்சி வேட்பாளர்கள் மும்முரம்
ADDED : அக் 08, 2011 01:13 AM
திருநெல்வேலி : நெல்லை மாவட்டத்தில் மக்கள் செல்வாக்கு உள்ள சுயேட்சைகளிடம் அரசியல்கட்சி வேட்பாளர்கள் தேர்தல் போட்டியில் இருந்து விலக 'டீலிங்' பேசி வருகின்றனர்.நெல்லை மாவட்டத்தில் உள்ளாட்சித்தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.
பிரசாரத்தில் ஈடுபடும் வேட்பாளர்களுக்கு 'கறார்' நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதால் வாகனம் மூலம் பிரசாரம் நடப்பதை எங்கும் காண முடியவில்லை. அதே நேரத்தில் ஆதரவாளர்கள், கட்சி நிர்வாகிகளுடன் கிராமங்கள், நகரங்களில் வார்டுவாரியாக வேட்பாளர்கள் சென்று வாக்காளர்களை சந்தித்து துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகளுக்கும் வேட்பாளர்கள் சென்று நிர்வாகிகளிடம் பேசி ஆதரவு திரட்டி வருகின்றனர். சில வார்டுகளில் சுயேட்சை வேட்பாளர்கள் அரசியல் கட்சி வேட்பாளர்களை மிஞ்சும் வகையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் நாள் நெருங்கும் போது பிரசாரம் மேலும் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் 'சுயேட்சைகள்' மீது வேட்பாளர்கள் பார்வை படிந்துள்ளது. ஓரளவு மக்கள் செல்வாக்கு உள்ள சுயேட்சைகளிடம் 'பேசி' போட்டியில் இருந்து விலகச்செய்து ஓட்டு ஆதாயம் அடையும் திட்டத்தில் முக்கிய கட்சி வேட்பாளர்கள் உள்ளனர். பல இடங்களில் சுயேட்சை வேட்பாளர்களிடம் ரகசிய 'டீலிங்' நடக்கிறது. சில இடங்களில் சிறிய கட்சி வேட்பாளர்களிடமும் முக்கிய கட்சி வேட்பாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.இதுகுறித்து அரசியல்கட்சி பிரமுகர் ஒருவர் கூறும் போது, ''தேர்தல் நாள் நெருங்கும் போது சுயேட்சைகளிடம் பேச்சுவார்த்தை மேலும் விறுவிறுப்பாக நடக்கும். கடைசி 5 நாட்களில் தான் தேர்தலில் யார், யாருக்கு இடையே உண்மையான போட்டி என தெரியவரும்'' என்றார்.


