/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/தென்காசியில் தவறி விழுந்து அரசு பள்ளி ஊழியர் பலிதென்காசியில் தவறி விழுந்து அரசு பள்ளி ஊழியர் பலி
தென்காசியில் தவறி விழுந்து அரசு பள்ளி ஊழியர் பலி
தென்காசியில் தவறி விழுந்து அரசு பள்ளி ஊழியர் பலி
தென்காசியில் தவறி விழுந்து அரசு பள்ளி ஊழியர் பலி
ADDED : அக் 08, 2011 01:13 AM
தென்காசி : தென்காசி பழைய பஸ்ஸ்டாண்டில் தவறி விழுந்த அரசு பள்ளி ஊழியர் பரிதாபமாக இறந்தார்.தென்காசி பழைய பஸ்ஸ்டாண்ட் இலவச கழிப்பறை பகுதி சுகாதார சீர்கேடுகள் நிறைந்ததாக இருக்கிறது.
இங்கு செல்லும் பயணிகள் பலர் வழியிலேயே வழுக்கி கீழே விழுந்து காயம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இருப்பினும் பயணிகள் அவசரத்திற்கு இலவச கழிப்பறையை பயன்படுத்தும் கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நேற்று மாலையில் பயணி ஒருவர் இலவச கழிப்பறைக்கு சென்றார். அப்போது அவர் தவறி கீழே விழுந்தார். சிறிது நேரத்தில் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.தீவிர விசாரணையில் இறந்த நபர் பண்பொழி கணக்கப்பிள்ளை தெருவை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (56) என்றும், இவர் செங்கோட்டை அரசு பள்ளியில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது.இதுபற்றி தென்காசி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்கு பதிவு செய்து முத்துகிருஷ்ணன் உடலை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமாரி விசாரணை நடத்தி வருகிறார்.


