Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/கோபி 27வது வார்டில் தே.மு.தி.க., - மார்க்.,

கோபி 27வது வார்டில் தே.மு.தி.க., - மார்க்.,

கோபி 27வது வார்டில் தே.மு.தி.க., - மார்க்.,

கோபி 27வது வார்டில் தே.மு.தி.க., - மார்க்.,

ADDED : அக் 08, 2011 01:31 AM


Google News
நேரடி மோதல் : கோபிசெட்டிபாளையம்: கோபி நகராட்சி 27வது வார்டில் தே.மு.தி.க., மற்றும் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., - தி.மு.க., - காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தனித்து களமிறங்குகின்றன. தே.மு.தி.க., - மார்க்சிஸ்ட் கட்சிகள் கூட்டணி அமைத்து களத்தில் குதித்துள்ளன.

கூட்டணி அறிவிப்புக்கு முன் கோபி நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு 30 வார்டுக்கும் தே.மு.தி.க., வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டன. கூட்டணி அமைந்த பின், கோபி நகராட்சி 27வது வார்டு மட்டும், மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அக்கட்சி சார்பில், துரைசாமி வேட்பு மனு தாக்கல் செய்தார். அந்த வார்டு, தே.மு.தி.க., வேட்பாளர் சையத் முபாரக், நேற்று முன்தினம் மனு வாபஸ் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் மனு வாபஸ் பெறவில்லை. இதனால், 27வது வார்டில் தே.மு.தி.க.,வும் - மார்ச்சிஸ்ட்டும் நேரடியாக மோதுகின்றன. கோபி நகராட்சியில் மார்க்சிஸ்ட் கட்சிக்கென ஒதுக்கப்பட்ட ஒரு வார்டிலும், தே.மு.தி.க., வேட்பாளர் களமிறங்குவதால், கோபி நகராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர் பதவியில் போட்டியிடும் தே.மு.தி.க., வேட்பாளர்களை ஆதரித்து, மார்க்சிஸ்ட் கட்சியினர் பிரச்சாரம் செய்வரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே, கோபி நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் தே.மு.தி.க., வேட்பாளர் தமிழ்செல்விக்கு, கட்சி நிர்வாகிகள் சரியான ஒத்துழைப்பு தருவதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. இந்நிலையில், மார்க்சிஸ்ட் கட்சியினரும் தே.மு.தி.க.,வுக்கு எதிராக திரும்பினால், உள்ளாட்சி தேர்தலில் சிரமமான சூழ்நிலை உருவாகும். கோபி நகராட்சியில் தே.மு.தி.க.,வும், கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட்டும் நேரடியாக களமிறங்குவதால், உள்ளாட்சி தேர்தலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us