/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/அடிக்கடி நிலவும் மின் தடையால் ஈரோட்டில் ஜவுளி உற்பத்தி பாதிப்புஅடிக்கடி நிலவும் மின் தடையால் ஈரோட்டில் ஜவுளி உற்பத்தி பாதிப்பு
அடிக்கடி நிலவும் மின் தடையால் ஈரோட்டில் ஜவுளி உற்பத்தி பாதிப்பு
அடிக்கடி நிலவும் மின் தடையால் ஈரோட்டில் ஜவுளி உற்பத்தி பாதிப்பு
அடிக்கடி நிலவும் மின் தடையால் ஈரோட்டில் ஜவுளி உற்பத்தி பாதிப்பு
ADDED : அக் 08, 2011 01:32 AM
ஈரோடு: ஈரோட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் மின் தடையால், ஜவுளி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நீடித்து வரும் மின் பற்றாக்குறையால், மாநிலம் முழுவதும் அரசு
மின் விநியோக நேரம் குறைத்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. வரும் 26ம்
தேதி தீபாவளி பண்டிகை துவங்க இருப்பதால், ஈரோடு, திருப்பூர், கரூர் மற்றும்
கோவை உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் ஜவுளி உற்பத்தி ஜரூராக நடந்து
வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் காட்டன் ஆடைகள் அதிகளவு தயார் செய்யப்பட்டு
வருகிறது. வெளிமாநில வியாபாரிகள் தங்களுக்கு தேவையான ஜவுளி துணிகளை தயார்
செய்ய ஆர்டர் கொடுத்துள்ளனர். இவர்களுக்கு ஒரு வாரத்துக்குள் ஆர்டர்
துணிகளை தயார் செய்து அனுப்பி வைக்கவேண்டும். அதன்படி, வீரப்பன் சத்திரம்,
பவானி, பள்ளிபாளையம், திருச்செங்கோடு உள்பட சுற்றுவட்டார பகுதியில்
விசைத்தறி மூலம் ஜவுளி உற்பத்தி பணி நடந்து வருகிறது. மின் வெட்டு
அதிகரித்து வருவதால், ஜவுளி உற்பத்தி தாமதம் ஆகிறது. ஆர்டர்
கொடுத்தவர்களுக்கு சரியான நேரத்தில் ஜவுளி வழங்க முடிவதில்லை. குறைந்த
நேரத்தில் மின் சப்ளை செய்வதால், பணிச்சுமை அதிகரித்துள்ளது.


