Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/புதிய வடிவில், புத்துயிர் பெறுகிறது பி.எஸ்.பார்க் பாலம் :கோவிலுக்கு பாதிப்பின்றி கொண்டு செல்ல திட்டம

புதிய வடிவில், புத்துயிர் பெறுகிறது பி.எஸ்.பார்க் பாலம் :கோவிலுக்கு பாதிப்பின்றி கொண்டு செல்ல திட்டம

புதிய வடிவில், புத்துயிர் பெறுகிறது பி.எஸ்.பார்க் பாலம் :கோவிலுக்கு பாதிப்பின்றி கொண்டு செல்ல திட்டம

புதிய வடிவில், புத்துயிர் பெறுகிறது பி.எஸ்.பார்க் பாலம் :கோவிலுக்கு பாதிப்பின்றி கொண்டு செல்ல திட்டம

ADDED : அக் 08, 2011 01:32 AM


Google News
ஈரோடு: ஈரோடு பிரப் ரோடு, காந்திஜி ரோடு, மணிக்கூண்டை இணைக்கும் வகையிலான 'டி' வடிவ மேம்பாலம் அமைக்க அரசு தொடர் முயற்சி செய்து, வடிவமைப்பில் சில மாற்றங்களையும் செய்து வருகிறது.

ஈரோடு பி.எஸ்.பார்க்கில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், பிரப் ரோட்டுடன், மணிக்கூண்டு ரோடு மற்றும் காந்திஜி ரோட்டை இணைக்கும் வகையில், 'ஒய்' வடிவ மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. அதன் பின், பிரப் ரோட்டில் துவங்கி, காந்திஜி ரோடு வரை 'எல்' வடிவ பாலம் அமைக்க திட்டமிட்டனர். இதற்கு, ஈரோட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேம்பாலம் அமைப்பதற்காக காந்திஜி ரோட்டில் தோண்டப்பட்ட குழிகள் மூடப்பட்டு, தேவையின்றி செலவு செய்யப்பட்டது. தற்போது, காந்திஜி ரோட்டில் இருந்து பி.எஸ்.பார்க் நோக்கி வந்து, அங்கிருந்து பிரப் ரோடு மற்றும் கச்சேரி ரோட்டை இணைக்கும் வகையில், 'டி' வடிவ மேம்பாலம் அமைக்க திட்டமிட்டுள்ளனர். இத்திட்டம் குறித்து கடிதம் ஒன்றில், தேசிய நெடுஞ்சாலை கோட்டப் பொறியாளர் அழகுராஜ் கூறியுள்ளதாவது: ஈரோடு ரயில்வே ஸ்டேஷனையும், பிரப் ரோட்டையும் இணைக்கும் சாலை, 'பிரிட்டிஷ் ஸ்கீம் சாலை' என்ற, 80 அடி திட்ட சாலையாகும். மக்களின் கோரிக்கையை ஏற்று, இச்சாலையை திறக்க ஈரோடு மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. ஈரோடு மாநகரில் பி.எஸ்.பார்க் அருகில், மேம்பாலம் கட்டும் பணி மத்திய சாலை நிதி திட்டத்துக்கு 12.34 கோடி ரூபாய் நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டு, 12.95 கோடிக்கு தொழில் நுட்ப ஒப்புதலும் அளிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் 'சிவா இன்ஜினியரிங்' கம்பெனிக்கு பணி ஒப்படைக்கப்பட்டு, சென்றாண்டு ஏப்ரல் 14ம் தேதி முன்னாள் நெடுஞ்சாலைத்துறை அமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட்டது. பிரப் ரோடு பெரிய மாரியம்மன் கோவிலுக்கு இடையூறு இல்லாமல், பாலத்துக்கு இரட்டை தூண்களுக்கு பதில், ஒற்றைத் தூண் அமைக்க தொழில் நுட்ப ரீதியாக ஒப்புதல் பெறப்பட்டு, ஏற்கனவே ஒப்புதல் பெறப்பட்ட மேம்பாலத்தின் சாய்வு பகுதியை பெரிய மாரியம்மன் கோவில் அருகே அமைக்காமல், பிரப் ரோட்டில் ஆர்.டி.ஓ., அலுவலகம் தாண்டி சற்று தூரத்தில் அமைக்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இப்பணியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். பணி நிறுத்தப்படுவதால் தனக்கு நஷ்டம் ஏற்படும் என ஒப்பந்தகாரர் கேட்டுக் கொண்டதால், தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் பணிமுன் நிறைவு செய்யப்பட்டுள்ளது. தற்போதைய 'டி' வடிவ பாலத்தில் இரட்டை தூண்களுக்கு பதில் ஒற்றைத்தூண்களுடன், ஓடுதளம் காந்திஜி ரோட்டில் இருந்து பிரப் ரோடு வரை அகலம் 11 மீட்டராகவும், அதன்பின் மொத்த அகலம் 12 மீட்டராகவும், மொத்த நீளம் 608.913 மீட்டராகவும் இருக்கும். உயர்மட்ட மேம்பாலத்தில் கச்சேரி ரோட்டின் ஓடுதளம் அகலம் 7.5 மீட்டராகவும், மொத்த அகலம் 8.5 ஆகவும், நீளம் 219.859 மீட்டராகவும் அமையும். 'டி' வடிவ இம்மேம்பாலம் மொத்தம் 828.772 மீட்டர் நீளத்தில் அமைய உள்ளது. எதிர்கால போக்குவரத்தை கருத்தில் கொண்டு புதிய தொழில் நுட்ப பிரேரணைகளும் தலைமை பொறியாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us