/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/விளாத்திகுளம் யூனியனில் 5 பஞ்., தலைவர்கள் போட்டியின்றி தேர்வுவிளாத்திகுளம் யூனியனில் 5 பஞ்., தலைவர்கள் போட்டியின்றி தேர்வு
விளாத்திகுளம் யூனியனில் 5 பஞ்., தலைவர்கள் போட்டியின்றி தேர்வு
விளாத்திகுளம் யூனியனில் 5 பஞ்., தலைவர்கள் போட்டியின்றி தேர்வு
விளாத்திகுளம் யூனியனில் 5 பஞ்., தலைவர்கள் போட்டியின்றி தேர்வு
ADDED : அக் 08, 2011 01:41 AM
விளாத்திகுளம் : விளாத்திகுளம் யூனியனில் 5 பஞ்.,தலைவர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
விளாத்திகுளம் யூனியனில் மொத்தம் 51 கிராம பஞ்.,கள் உள்ளது.
இதில் 5 பஞ்.,தலைவர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். வேடபட்டி பஞ்.,தலைவராக ஜெயலட்சுமி, இனாம் சுப்பிரமணியபுரம் பஞ்.,தலைவராக அமராவதி, நமச்சிவாயபுரம் பஞ்.,தலைவராக ராமகிருஷ்ணன், கழுகாசலபுரம் பஞ்.,தலைவராக செல்வராஜ், கே.சுந்தரேஸ்வரபுரம் பஞ்.,தலைவராக பாலம்மாள் ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.புதூர் யூனியனின் 8 பஞ்.,தலைவர்கள் போட்டியின்றி தேர்வு : புதூர் யூனியனில் 8 பஞ்.,தலைவர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.புதூர் யூனியனில் மொத்தம் 44 கிராம பஞ்.,கள் உள்ளது. இதில் 8 பஞ்.,தலைவர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அயன்வடமலாபுரம் பஞ்.,தலைவராக கோப்பம்மாள், கருப்பூர் பஞ்., தலைவராக ஜெயஜோதி, லட்சுமிபுரம் பஞ்., தலைவராக விநாயகவள்ளி, முத்தையாபுரம் பஞ்.,தலைவராக ராமலிங்கம், என்.ஜெகவீரபுரம் பஞ்.,தலைவராக லட்சுமி, பட்டிதேவன்பட்டி பஞ்.,தலைவராக வேலாயுதம், சென்னம்பட்டி பஞ்.,தலைவராக ராஜேந்திரன், செங்கோட்டை பஞ்.,தலைவராக வேல்ச்சாமி ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.


