/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ஆறுமுகநேரி டவுன் பஞ்., தலைவர் பதவிக்கு 8பேர் போட்டிஆறுமுகநேரி டவுன் பஞ்., தலைவர் பதவிக்கு 8பேர் போட்டி
ஆறுமுகநேரி டவுன் பஞ்., தலைவர் பதவிக்கு 8பேர் போட்டி
ஆறுமுகநேரி டவுன் பஞ்., தலைவர் பதவிக்கு 8பேர் போட்டி
ஆறுமுகநேரி டவுன் பஞ்., தலைவர் பதவிக்கு 8பேர் போட்டி
ADDED : அக் 08, 2011 01:48 AM
ஆறுமுகநேரி : ஆறுமுகநேரி டவுன் பஞ்.,தலைவர் பதவிக்கு 2 சுயேட்சைகள் உட்பட 8பேர் போட்டியிடுகின்றனர்.
ஆறுமுகநேரி டவுன் பஞ்.,தலைவர் பதவிக்கு திமுக.,அதிமுக.,காங்.,மதிமுக.,பாமக.,தேசியவாத காங்.,கட்சியைச் சேர்ந்தவர்கள் உட்பட 8பேர் மனுதாக்கல் செய்திருந்தனர்.
அதே போன்று 18 கவுன்சிலர் பதவிக்கு 102பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். வாபஸ் பெறுவதற்கு கடைநாளான நேற்று 5வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுக.,மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்திருந்த நவநீத பாண்டியன், 7வது வார்டு தேமுதிக.,சார்பில் மனு தாக்கல் செய்திருந்த பாத்திமா ஆகிய 2பேர் மட்டும் மனுக்கள் வாபஸ் பெற்றுக் கொண்டனர். இதையடுத்து 18 கவுன்சிலர் பதவிக்கு 100பேர் போட்டியிடுகின்றனர். தலைவர் பதவிக்கு மனுதாக்கல் செய்திருந்த யாரும் வாபஸ் பெறவில்லை. இதையடுத்து தலைவர் பதவிக்கு உஜ்ஜல்சிங் (பாமக.,-மாம்பழம்), கல்யாணசுந்தரம் (திமுக.,-உதயசூரியன்), கனகராஜ் (அதிமுக.,-இரட்டைநிலை), பார்த்தீபன் (சுயேட்சை), பொன்ராஜ் (தேசியவாத காங்.,-கடிகாரம்), ராமஜெயம் (சுயே-புத்தகம்), ராஜாமணி (காங்.,-கை) ஆகிய 8பேர் போட்டியிடுகின்றனர்.


