கொடுமைப்படுத்துகிறார் உள்ளூர் காங்கிரஸ் தலைவர் : சோனியாவுக்கு விதவைப் பெண் கடிதம்
கொடுமைப்படுத்துகிறார் உள்ளூர் காங்கிரஸ் தலைவர் : சோனியாவுக்கு விதவைப் பெண் கடிதம்
கொடுமைப்படுத்துகிறார் உள்ளூர் காங்கிரஸ் தலைவர் : சோனியாவுக்கு விதவைப் பெண் கடிதம்
ADDED : அக் 08, 2011 10:59 PM

நாக்பூர்: மகாராஷ்டிரா மாநிலம், விதர்பா பகுதியைச் சேர்ந்த விதவைப் பெண், 'உள்ளூர் காங்கிரஸ் தலைவரின் கொடுமையால் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நீங்கள் உதவி செய்யாவிட்டால், தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை' என, காங்., தலைவர் சோனியாவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம், விதர்பா பகுதியைச் சேர்ந்த விவசாயி சஞ்சய் மலிகர். இவரது மனைவி அபர்ணா. சஞ்சய் மலிகர், தனது நிலத்தில் பருத்தி விளைவித்து வந்தார். கடந்த பத்தாண்டுகளாக போதிய மழை பெய்யாத காரணத்தால், பருத்தியில் விளைச்சல் கிடைக்கவில்லை. விளைச்சல் இல்லாததாலும், கடன் நெருக்கடியாலும் வறுமையில் வாடிய சஞ்சய் மலிகர், சில ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். அபர்ணா, 'கோன் பனேகா குரோர்பதி' என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது, விதர்பா பகுதி விவசாயிகளின் துன்பம் குறித்து விவரித்தார். இதனால், நாடு முழுவதும் இவர் பிரபலமடைந்தார். இந்நிலையில், அபர்ணா மலிகர், காங்கிரஸ் தலைவர் சோனியாவிற்கு, சமீபத்தில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், 'கணவர் இறந்தபின், அவரது நிலத்தில் விவசாயம் செய்யவிடாமல், என் மாமனாரும், மாமியாரும் என்னை துன்புறுத்துகின்றனர். கணவனின் சகோதரனின் கொடுமையை தாங்க முடியவில்லை. இவர், உள்ளூர் காங்கிரஸ் தலைவராக இருப்பதால், போலீசாரும் உதவி செய்ய மறுக்கின்றனர். இதனால், வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நீங்கள் உதவி செய்யாவிட்டால், எனது தந்தை மற்றும் சகோதரனுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை. என்னைப் போல், விதர்பா பகுதியில் நூற்றுக்கணக்கான விதவைகள் அவதிப்படுகின்றனர்' என, குறிப்பிட்டுள்ளார்.


