/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/மின்தடையால் தவிக்கும் தேர்தல் பிரிவுமின்தடையால் தவிக்கும் தேர்தல் பிரிவு
மின்தடையால் தவிக்கும் தேர்தல் பிரிவு
மின்தடையால் தவிக்கும் தேர்தல் பிரிவு
மின்தடையால் தவிக்கும் தேர்தல் பிரிவு
ADDED : அக் 08, 2011 11:00 PM
ராமநாதபுரம் : உள்ளாட்சி தேர்தலையொட்டி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில், தேர்தல் தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
இந்த பிரிவுக்கு மட்டும் மின்சப்ளை அடிக்கடி துண்டிக்கப்படுகிறது. இதன் பராமரிப்பு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பொதுப்பணித்துறை மின்வாரிய பிரிவு வசம் உள்ளது. ஆனால் இந்த ஊழியர்களிடம் பலமுறை அதிகாரிகள் முறையிட்டும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை சென்னையிலிருந்து தேர்தல் குறித்த அறிக்கை கேட்கின்றனர். ஆனால் மின்தடையால் ஊழியர்கள் ஒரு மணி நேரத்துக்கு அரைமணி நேரம் ஓய்வு எடுக்க வேண்டிய நிலை உள்ளது. பாதி நேரம் மட்டுமே பணிகள் நடப்பதால், இரவில் பெண் ஊழியர்கள் உட்பட அனைவரும் கூடுதல் நேரம் பணியாற்றும் நிலை உள்ளது, என்றார்.


