Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/வத்திராயிருப்பு அருகே கன மழை : மின்னல் தாக்கி ஒருவர் பலி; 25 "டிவி' சேதம்

வத்திராயிருப்பு அருகே கன மழை : மின்னல் தாக்கி ஒருவர் பலி; 25 "டிவி' சேதம்

வத்திராயிருப்பு அருகே கன மழை : மின்னல் தாக்கி ஒருவர் பலி; 25 "டிவி' சேதம்

வத்திராயிருப்பு அருகே கன மழை : மின்னல் தாக்கி ஒருவர் பலி; 25 "டிவி' சேதம்

ADDED : அக் 08, 2011 11:14 PM


Google News

வத்திராயிருப்பு : விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கூமாப்பட்டி ராமசாமியாபுரத்தில்மின்னல் தாக்கியதில், 25 க்கும் மேற்பட்ட 'டிவி' , கம்ப்யூட்டர், பிரிஜ் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் சேதமடைந்தன.

சாத்தூரில் ஒருவர் பலியானார். கூமாப்பட்டி பகுதியில் நேற்று மாலை 4 மணிக்கு சூறாவளி காற்று, பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது. ராமசாமியாபுரம் மறவர் காளியம்மன் கோயில் தெருவில் உள்ள கணேசன், குருவையா உட்பட 25 பேர் வீடுகளில் 'டிவி' கம்ப்யூட்டர், 'பிரிஜ்' கருகி சேதமுற்றது . அப்போது ஏற்பட்ட சத்தத்தால் பலரும் பீதியடைந்து, வீட்டைவிட்டு வெளியெறினர். சாத்தூர்:வெம்பக்கோட்டை கண்டியாபுரம் அகதிகள் முகாமை சேர்ந்தவர் அந்தோணி, 25. பெயிண்டரான இவர் , நேற்று இரவு 7.15 மணிக்கு, மடத்துப்பட்டி பஸ்ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தார். அப்போது மின்னல் தாக்கி இறந்தார்.வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us