/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/என்ன செய்ய வேண்டும் ராஜபாளையத்துக்கு : தேர்தல் அறிக்கைஎன்ன செய்ய வேண்டும் ராஜபாளையத்துக்கு : தேர்தல் அறிக்கை
என்ன செய்ய வேண்டும் ராஜபாளையத்துக்கு : தேர்தல் அறிக்கை
என்ன செய்ய வேண்டும் ராஜபாளையத்துக்கு : தேர்தல் அறிக்கை
என்ன செய்ய வேண்டும் ராஜபாளையத்துக்கு : தேர்தல் அறிக்கை
ADDED : அக் 08, 2011 11:24 PM
ராஜபாளையம் : மாம்பழம், வளர்ப்பு நாய் என பல வகையில் சிறப்பு பெற்று விளங்கும் ராஜபாளையம், மாவட்டத்திலே பெரிய நகராட்சியாக இருந்தும், அடிப்படை வசதிகளில் என்னவோ இன்றும் பின் தங்கியே உள்ளது.
நகராட்சிக்கு புதிய கவுன்சில் வருவதும், செல்வதும் வழக்கமான ஒன்றாக இருந்தாலும், மக்களுக்கு தேவையான திட்டங்கள் ஏதும் புதிதாக கொண்டு வரப்பட்டதா என்றால் இல்லை. அரசும் ஆண்டு தோறும் பல வகைகளில் நிதியை ஒதுக்கதான் செய்கிறது. ஆனால் இந்த நிதி முறையாக செலவிடப்பட்டதா என்றால் இல்லை. ரோடுகள் அனைத்தும் குண்டும் குழியுமாக, குப்பைகள் குவிந்து சுகாதாரமற்ற நிலையில் அருவறுப்புடன் காட்சி தருகிறது. பழைய பஸ் ஸ்டாண்ட் சென்றால் அங்குள்ள கழிவறையை வைத்தே, நகராட்சியின் செயல்பாடு எந்த அளவு உள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம். தற்போது அனைத்து கட்சிகளும் தனியாக போட்டியிடுவதால், திறமையானவர்களை தேர்ந்தெடுப்பதில் நல்ல ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை வாக்காளர்களும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
என்ன வேண்டும் ராஜபாளையத்துக்கு இதோ... ராஜபாளையம் மக்களின் தேவைகளை உணர்ந்து, எதிர்பார்ப்பை சுமந்து 'தேர்தல் அறிக்கை' வெளியிடுகிறது 'தினமலர்'. வழக்கமாக கட்சிகள் தான் தேர்தல் அறிக்கை வெளியிடும். வாசகர்களின் சார்பாக, 'தினமலர் 'வெளியிடும் இந்த தேர்தல் அறிக்கையை, வேட்பாளர்கள் தாங்கள் நிறைவேற்றப் போகும் வாக்குறுதிகளாக எடுத்துக்கொள்ள வேண்டும். 'வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன்' என உளமாற உறுதிகூறும் வேட்பாளர்களை, நல்லது செய்ய விரும்பும் தலைவரை நாம் தேர்வு செய்வோம்.
இனி வாக்குறுதிகள்
* ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் மழை பொய்த்ததால், நீர் வரத்து இல்லாமல், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதற்கு நிரந்தர தீர்வாக தாமிரபரணி குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
* குடிநீருக்காக ஐந்து ஆண்டுகளுக்கு முன் துவங்கிய புதிய அணை கட்டும் பணி, இரண்டு ஆண்டுகளுக்கு முன் நின்றது. இந்த அணை பணியை மீண்டும் துவக்கி, குடிநீர் தட்டுப்பாட்டிற்கு முற்றிப்புள்ளி வைக்க வேண்டும்.
* ராஜபாளையத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, பைபாஸ் ரோடு அமைக்கவேண்டும்.
* மக்கள் பயன்பெறும் வகையில் பாதாள சாக்கடை வசதியை ஏற்படுத்த வேண்டும்.
* சுகாதார வளாகம் இல்லாததால், கண்மாய் கரைகள் திறந்தவெளி கழிப்பிடமாக மாறுகிறது. இதற்கு தீர்வாக சுகாதார வளாகம் ஏற்படுத்த வேண்டும்.
* புது பஸ் ஸ்டாண்டை முழுமையாக செயல்படுத்த வேண்டும்.
* பழைய பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்கு போதுமான வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
* பயணிகள் வசதிக்காக இரு பஸ் ஸ்டாண்டுக்கும் இரவு நேரத்தில் பஸ்களை இயக்க வேண்டும்
* நிலத்தடி நீரை பெருக்கும் வகையில் கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகளை அவ்வப்போது பராமரிக்க வேண்டும்.
* நகராட்சியில் கடந்த காலங்களில் நடந்த கூட்டங்கள் பிரச்னைகளால் பாதியிலே முடிந்துள்ளது. வரும் கூட்டங்களில் இது போன்ற நிலையை தவிர்த்து ,மக்களின் தேவையை கருத்தில் கொண்டு, தேவையான திட்டங்களை ஒற்றுமையுடன் செயல்படுத்த வேண்டும்.


