ADDED : அக் 09, 2011 01:42 AM
மதுரை : மதுரை செல்லம்பட்டியை சேர்ந்த ராஜா, 27.
இவர், இரண்டரை கிலோ கஞ்சா கடத்தியதாக விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போதை பொருள் தடுப்பு கோர்ட்டில் ராஜா ஆஜராகாமல் இருந்தார். அவருக்கு கைது வாரன்ட் பிறப்பித்து கோர்ட் உத்தரவிட்டது. கூடுதல் மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் ராஜா சரணடைந்தார். அவரை, ரிமாண்ட் செய்து நீதிபதி ராஜசேகரன் உத்தரவிட்டார்.


