/உள்ளூர் செய்திகள்/மதுரை/கோயில் குளங்களில் ஆக்கிரமிப்பு சரிசெய்ய கலெக்டர் உத்தரவுகோயில் குளங்களில் ஆக்கிரமிப்பு சரிசெய்ய கலெக்டர் உத்தரவு
கோயில் குளங்களில் ஆக்கிரமிப்பு சரிசெய்ய கலெக்டர் உத்தரவு
கோயில் குளங்களில் ஆக்கிரமிப்பு சரிசெய்ய கலெக்டர் உத்தரவு
கோயில் குளங்களில் ஆக்கிரமிப்பு சரிசெய்ய கலெக்டர் உத்தரவு
ADDED : அக் 09, 2011 01:42 AM
மதுரை : ''கோயில் குளங்கள், கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை 15 நாட்களில் அகற்ற வேண்டும்,'' என கலெக்டர் சகாயம் உத்தரவிட்டார்.
மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயில், குளங்களில் மழைநீர் சேகரிப்பது குறித்த ஆலோசனை கலெக்டர் சகாயம் தலைமையில் நடந்தது. அவர் பேசியதாவது: மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்ப வேண்டும். வரத்துக் கால்வாய்கள் சீரமைப்பு, ஆக்கிரமிப்பு அகற்றம் செய்ய வேண்டும். கூடலழகர் கோயில் தெப்பக்குளத்தில் ஆக்கிரமிப்புகள் ஒரு வாரத்தில் அகற்ற வேண்டும். மீனாட்சி அம்மன் கோயில், திருப்பரங்குன்றம், திருமோகூர், அழகர்கோயில்களில் உள்ள குளங்களுக்கு நீர்வரக் கூடிய பகுதிகளை கண்டறிந்து, ஆக்கிரமிப்பு இருந்தால் 15 நாட்களில் அகற்ற வேண்டும். ஆக்கிரமிப்புகள் செய்தவர் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். வைகை மற்றும் கிருதுமால் நதிகளில் சாக்கடை கலப்பதை தவிர்க்க வேண்டும்.
கோயில் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். அங்கு பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும். பிரசாதம், பூஜை பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் விற்பனை செய்யக் கூடாது. கோயிலை சுற்றி ஒரு கி.மீ., அளவிற்கு முழுமையாக அவற்றை தடை செய்ய வேண்டும். இவற்றை டி.ஆர்.ஓ., இணை கமிஷனர்கள், ஊராட்சி உதவி இயக்குனர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு 15 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும், என பேசினார். இணை கமிஷனர் சுதர்சன், நேர்முக உதவியாளர் தனம், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் பசும்பொன் கலந்து கொண்டனர்.


