Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/கொடை விழாவுக்கு ஒலிபெருக்கி அனுமதி திருமலாபுரம் பகுதி மக்கள் வலியுறுத்தல்

கொடை விழாவுக்கு ஒலிபெருக்கி அனுமதி திருமலாபுரம் பகுதி மக்கள் வலியுறுத்தல்

கொடை விழாவுக்கு ஒலிபெருக்கி அனுமதி திருமலாபுரம் பகுதி மக்கள் வலியுறுத்தல்

கொடை விழாவுக்கு ஒலிபெருக்கி அனுமதி திருமலாபுரம் பகுதி மக்கள் வலியுறுத்தல்

ADDED : அக் 11, 2011 02:28 AM


Google News

திருநெல்வேலி : கோயில் கொடை விழாவுக்கு ஒலிபெருக்கி அனுமதி வழங்க வேண்டும் என்று திருமலாபுரம் பகுதி மக்கள் வலியுறுத்தினர்.

சேர்ந்தமரம் திருமலாபுரம் ராமசாமி கோயில் நிர்வாகி கணேசன் தலைமையில் பலர் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: திருமலாபுரம் வண்டிக்கார வகையறாவிற்கு பாத்தியப்பட்ட ராமசாமி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி கடைசி வெள்ளிக்கிழமை கொடை விழாவை நடத்தி வருகிறோம். இந்த விழாவுக்கு ஒலிபெருக்கி அனுமதியை ஒவ்வொரு ஆண்டும் சேர்ந்தமரம் போலீஸ் ஸ்டேஷனில் பெற்று வருகிறோம். ஆனால் இந்த ஆண்டில் இதுவரை அனுமதி வழங்கப்படாமல் காலம் தாழ்த்தப்படுகிறது. கோயில் திருவிழாவுக்கு கடந்த 11ம் தேதி கொடி ஏற்றப்பட்டுள்ளது. எனவே, கோயில் கொடை விழா நடத்த ஒலிபெருக்கி மற்றும் கரகாட்டம் நடத்த அனுமதி வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us