Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/தமிழ் லயன்ஸ் சங்கவிவசாய கண்காட்சி

தமிழ் லயன்ஸ் சங்கவிவசாய கண்காட்சி

தமிழ் லயன்ஸ் சங்கவிவசாய கண்காட்சி

தமிழ் லயன்ஸ் சங்கவிவசாய கண்காட்சி

ADDED : அக் 11, 2011 11:11 PM


Google News
மதுரை:தமிழ் லயன்ஸ் சங்கம் சார்பில், மதுரை தமுக்கம் மைதானத்தில் ஐந்தாவது விவசாய கண்காட்சி நாளை பகல் 11 மணிக்கு துவங்குகிறது.கன்வீனர் தேசாய் கூறியதாவது:வேளாண் பல்கலை துணைவேந்தர் முருகேச பூபதி துவக்கி வைக்கிறார்.

மொத்தம் 150 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. விவசாய நவீன இயந்திரங்கள், டிராக்டர்கள் இடம் பெறுகின்றன. கால்நடை, வீட்டு செல்லப் பிராணிகள், ஈமு கோழி வளர்ப்பு மற்றும் தோட்டக்கலை கருத்தரங்குகள் நடைபெறும். வேளாண் விஞ்ஞானிகள் விளக்கம் அளிக்கின்றனர். பட்டுப்பூச்சி, மீன்கள், பறவைகள், நாய்கள் கண்காட்சி இடம்பெறுகிறது. வேளாண் சார்ந்த சுயதொழில் துவங்க ஆலோசனை வழங்கப்படும். வங்கி கடன்கள், அரசு திட்டங்கள் பற்றிய தகவல்களை அறியலாம். புதிய தொழில்நுட்ப செயல் விளக்கங்கள் இடம்பெறும். அக்.,16 வரை தினமும் பகல் 11 முதல் இரவு 8 மணி வரை நடைபெறும். மாலை 6 மணிக்கு கலை நிகழ்ச்சி உண்டு. அனுமதி இலவசம் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us