மேக்சிஸ் நிறுவன தலைவருக்கு சம்மன் அனுப்ப சி.பி.ஐ., திட்டம்
மேக்சிஸ் நிறுவன தலைவருக்கு சம்மன் அனுப்ப சி.பி.ஐ., திட்டம்
மேக்சிஸ் நிறுவன தலைவருக்கு சம்மன் அனுப்ப சி.பி.ஐ., திட்டம்

புதுடில்லி : ஏர்செல் நிறுவனத்தை, மேக்சிஸ் வாங்கிய விவகாரம் தொடர்பாக, மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவன தலைவர் அனந்த கிருஷ்ணனுக்கு சம்மன் அனுப்ப திட்டமிட்டுள்ளதாக, சி.பி.ஐ., வட்டாரங்கள் தெரிவித்தன.
சி.பி.ஐ., வட்டாரங்கள் கூறியதாவது: ஏர்செல் நிறுவனத்தை, மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்க நிர்பந்தம் செய்த குற்றச்சாட்டு தொடர்பாக, மேக்சிஸ் நிறுவன தலைவர் அனந்த கிருஷ்ணன், பிரிட்டனை மையமாக கொண்டு செயல்படும் ஆஸ்ட்ரோ ஆல் ஆசியா நெட்ஒர்க்ஸ் இயக்குனர் ரால்ப் மார்ஷல், தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் தயாநிதி மற்றும் கலாநிதிக்கு எதிராக, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து நேற்று (நேற்று முன்தினம்) கலாநிதி மற்றும் தயாநிதி வீடுகள் உட்பட, ஒன்பது இடங்களில் சி.பி.ஐ., சோதனை நடத்தியது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக, மேக்சிஸ் நிறுவன தலைவர் அனந்த கிருஷ்ணனுக்கு சம்மன் அனுப்ப, சி.பி.ஐ., திட்டமிட்டுள்ளது. இந்த வழக்கில் தொடர்புள்ள மற்றவர்களிடம், சி.பி.ஐ., ஏற்கனவே விசாரணை நடத்தியிருந்தாலும், அனந்த கிருஷ்ணனிடம் இதுவரை எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. எனவே, வழக்கு குறித்து அவரிடம் விசாரிக்க வேண்டியுள்ளதால், அவருக்கு சம்மன் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக, ரால்ப் மார்ஷல், கலாநிதி, தயாநிதிக்கும் சம்மன் அனுப்ப, சி.பி.ஐ., திட்டமிட்டுள்ளது. இவ்வாறு சி.பி.ஐ., வட்டாரங்கள் தெரிவித்தன.


