கொலை வெறியில் எஸ்.ஐ., சுண்டு விரல் "கறுக்'மனைவியை "போட்டுத் தள்ள' முயன்றவர் கைது
கொலை வெறியில் எஸ்.ஐ., சுண்டு விரல் "கறுக்'மனைவியை "போட்டுத் தள்ள' முயன்றவர் கைது
கொலை வெறியில் எஸ்.ஐ., சுண்டு விரல் "கறுக்'மனைவியை "போட்டுத் தள்ள' முயன்றவர் கைது
ADDED : அக் 12, 2011 12:10 AM
வீராணம்:வீராணம் போலீஸ் ஸ்டேஷனில், புகார் கொடுக்க வந்த மனைவியை, கொல்ல முயன்ற வியாபாரியை தடுத்த போது, ஆவேசமடைந்த வியாபாரி, சிறப்பு எஸ்.ஐ., யின் சுண்டுவிரலை, இரண்டாகக் கடித்து துப்பினார். துண்டிக்கப்பட்ட விரலில் ரத்தம் கொட்டியதால், எஸ்.ஐ., மயங்கி விழுந்தார்.சேலம் அம்மாபேட்டையை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ், 29. இவரது மனைவி விஜயலட்சுமி, 25. இருவருக்கும், எட்டு ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு, 2 மகன், ஒரு மகள் உள்ளனர்.
தள்ளுவண்டியில் டிபன் வியாபாரம் செய்து வரும் ஜெயபிரகாஷûக்கு, குடிப்பழக்கம் உள்ளது. அடிக்கடி குடித்துவிட்டு, மனைவியை அடித்து, உதைப்பது வழக்கம். இந்த கொடுமையை தாங்க முடியாமல் விஜயலட்சுமி, வீராணம் அடுத்த தாதம்பட்டியில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.அதன் பிறகும், ஜெயபிரகாஷ் குடிப்பதை நிறுத்தவில்லை. மாமியார் வீட்டுக்கு சென்று, ரகளையில் ஈடுபட்டார். வர மறுத்தால் கொலை செய்து விடுவதாக, மனைவியை மிரட்டினார். உயிருக்கு பயந்து, விஜயலட்சுமி வீராணம் போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் கொடுக்க சென்றார். இதனால், ஜெயபிரகாஷ் ஆத்திரமடைந்து, விஜயலட்சுமியின் கழுத்தை, பலமாக இறுக்கினார்.போலீஸ் ஸ்டேஷன் வாசலில், இந்த கொலை முயற்சி சம்பவம் நடந்தது. இதை கண்ணெதிரே பார்த்து, அதிர்ச்சியடைந்த சிறப்பு எஸ்.ஐ., பழனி மற்றும் போலீசார், ஜெயபிரகாஷ் பிடியில் இருந்த விஜயலட்சுமியை விடுவிக்க போராடினர்.
ஆத்திரமடைந்த ஜெயபிரகாஷ், திடீரென, பழனியின் வலது கை சுண்டு விரலை, இரண்டாக கடித்தெடுத்து, கீழே துப்பிவிட்டார். ரத்தம் கொட்டியதில், பழனி மயங்கி விழுந்தார். தனியார் மருத்துவமனையில் அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது. போலீசார், ஜெயபிரகாஷை கைது செய்தனர்.


