/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கட்சி சின்னமின்றி பிரசார நோட்டீஸ் பா.ம.க.,வினர் உச்சகட்ட விரக்திகட்சி சின்னமின்றி பிரசார நோட்டீஸ் பா.ம.க.,வினர் உச்சகட்ட விரக்தி
கட்சி சின்னமின்றி பிரசார நோட்டீஸ் பா.ம.க.,வினர் உச்சகட்ட விரக்தி
கட்சி சின்னமின்றி பிரசார நோட்டீஸ் பா.ம.க.,வினர் உச்சகட்ட விரக்தி
கட்சி சின்னமின்றி பிரசார நோட்டீஸ் பா.ம.க.,வினர் உச்சகட்ட விரக்தி
ADDED : அக் 12, 2011 01:04 AM
சேத்தியாத்தோப்பு : தேர்தல் பிரசார கூட்டத்திற்கு கட்சியின் சின்னத்துடன் நோட்டீஸ் அடிக்காததால் பா.ம.க., வினர் உச்ச கட்ட விரக்தியில் உள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தலில் பா.ம.க., தனித்து போட்டியிடும் என ராமதாஸ் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து பா.ம.க., வினர் கட்சித் தலைமையிடம் முண்டியடித்து சீட் கேட்டனர். பா.ம.க., அங்கீகார கடிதத்துடன் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு புவனகிரி தொகுதிக்குட்பட்ட 22வது வார்டுக்கு ராஜலட்சுமி, சிலம்புச்செல்வியும் 23வது வார்டுக்கு சேரலாதன், சரவணன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். கட்சியில் சீனியர்களான ராஜலட்சுமி, சேரலாதன் இருவரையும் ராமதாஸ் போட்டியிடக் கூறியதாக சொல்லப்பட்டது. கடைசி நேரத்தில் கட்சித் தலைவர் மணி தனது ஆதரவாளர்களான சிலம்புச்செல்வியையும், சரவணனையும் கட்சியின் வேட்பாளராக ஏற்க தேர்தல் அதிகாரிக்கு மீண்டும் ஒரு கடிதம் கொடுத்ததால் அவர்களை கட்சி வேட்பாளராக தேர்தல் அதிகாரி அறிவித்தார். கட்சித் தலைமை செய்த குழப்பத்தால் ராமதாசின் ஆதரவாளர்கள் சுயேச்சையாகவும், மணியின் ஆதரவாளர்கள் கட்சி சின்னத்திலும் களமிறங்கியுள்ளனர். இந்நிலையில் இன்று (12ம் தேதி) ராமதாஸ் சேத்தியாத்தோப்பில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். பிரசாரத்தின் போது எந்த வேட்பாளரை ஆதரித்து ராமதாஸ் பிரசாரம் செய்வார் என அவரது ஆதரவாளர்களும் குழப்பத்திற்குள்ளாகியுள்ளனர். தேர்தல் பணிக்குழு சார்பில் அச்சடிக்கப்பட்ட நோட்டீசில் கட்சியின் வேட்பாளர்கள் பெயரோ, கட்சியின் சின்னமோ இடம் பெற வில்லை. பொதுவாக பா.ம.க., தேர்தல் பிரசாரக் கூட்டம் என அச்சடிக்கப்பட்டுள்ளது. இது பா.ம.க., நிர்வாகிகளிடையே விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.


