/உள்ளூர் செய்திகள்/சென்னை/பாதாள சாக்கடை பள்ளத்தில் சிக்கிய இரு பணியாளர்கள் உயிருடன் மீட்புபாதாள சாக்கடை பள்ளத்தில் சிக்கிய இரு பணியாளர்கள் உயிருடன் மீட்பு
பாதாள சாக்கடை பள்ளத்தில் சிக்கிய இரு பணியாளர்கள் உயிருடன் மீட்பு
பாதாள சாக்கடை பள்ளத்தில் சிக்கிய இரு பணியாளர்கள் உயிருடன் மீட்பு
பாதாள சாக்கடை பள்ளத்தில் சிக்கிய இரு பணியாளர்கள் உயிருடன் மீட்பு
ADDED : அக் 12, 2011 02:35 AM
பெருங்குடி : பாதாளச் சாக்கடை அமைக்கும் பணியின் போது, மண் சரிந்து பள்ளத்தில் சிக்கிய, இரண்டு பணியாளர்களை, தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.பெருங்குடி, வர்கீஸ் தெருவில், கடந்த சில வாரங்களாக பாதாளச் சாக்கடை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதில், ஐந்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில், நேற்று வாட்டர் டேங்க் அருகே, குழாய் அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.பைப் லைன் பொருத்துவதற்காக பள்ளம் எடுத்தபோது, தீடீரென மண் சரிந்ததில் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த முருகேசன், 25. கார்திகேயன், 22. ஆகிய இரண்டு பணியாளர்கள் பத்து அடி பள்ளத்தில் தவறி விழுந்து, மணலில் சிக்கிக் கொண்டனர்.இதுகுறித்து, திருவான்மியூர் தீயணைப்பு நிலையத்திற்கு கொடுத்த தகவலின் பேரில், ஐந்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, மீட்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு, பத்திரமாக மீட்கப்பட்ட இரண்டு பணியாளர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


