ADDED : அக் 13, 2011 01:44 AM
புதுச்சேரி:புதுச்சேரி தலைமை தபால் நிலையத்தில் அஞ்சல் நாள்
கொண்டாடப்பட்டதுதேசிய அஞ்சல் வார விழா, கடந்த 9ம் தேதி துவங்கி, 14ம் தேதி
வரை கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, புதுச்சேரி தலைமை தபால் நிலையத்தில்
அஞ்சல் நாள் நேற்றுமுன்தினம் கொண்டாடப்பட்டது.போஸ்ட் மாஸ்டர் ரங்கநாதன்
தøலைமையில் நடந்த நிகழ்ச்சியில், குருசுக்குப்பம் என்.கே.சி., அரசுப் பள்ளி
மாணவிகள் கலந்து கொண்டு, தபால் நிலைய செயல்பாடுகள் குறித்து அறிந்து
கொண்டனர்.
தபால் நிலையப் பணிகள் குறித்து, முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் இன்பழகன்,
மாணவிகளுக்கு விளக்கினார்.நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகள் அனைவருக்கும்,
எழுது பொருட்கள் பரிசாக அளிக்கப்பட்டது.


