Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/பள்ளிகளில் அலுவலக பணியாளர் காலியிடம்

பள்ளிகளில் அலுவலக பணியாளர் காலியிடம்

பள்ளிகளில் அலுவலக பணியாளர் காலியிடம்

பள்ளிகளில் அலுவலக பணியாளர் காலியிடம்

ADDED : ஜூலை 25, 2011 10:26 PM


Google News

தேனி : அரசு பள்ளிகளில் உள்ள அலுவலக பணியாளர் காலியிடங்களை நிரப்ப வேண்டும், என தமிழக இடைநிலை மற்றும் பட்டதாரி(பதவி உயர்வு) ஆசிரியர் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.

அரசு பள்ளிகளில் அலுவலக பணிகளை செய்வதற்கான இளநிலை உதவியாளர்கள், அலுவலக உதவியாளர், பதிவுறு எழுத்தர், காவலர் பணியிடங்கள் நீண்ட நாட்களாக நிரப்பப்படாமல் உள்ளது. இதனால் அலுவலகப்பணிகள், பள்ளி வரவு செலவு கணக்குகளை ஆசிரியர்களே கூடுதலாக கவனிக்கும் நிலை உள்ளது. இதனால் மாணவர்களுக்கு குறிப்பிட்ட பாடவேளைகளில் பாடம் நடத்த முடிவதில்லை. இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க காலி பணியிடங்களை அரசு நிரப்ப வேண்டும், என கூறப்பட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us