/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/நகராட்சி தி.மு.க., சேர்மன் வேட்பாளர் தீவிர பிரச்சாரம்நகராட்சி தி.மு.க., சேர்மன் வேட்பாளர் தீவிர பிரச்சாரம்
நகராட்சி தி.மு.க., சேர்மன் வேட்பாளர் தீவிர பிரச்சாரம்
நகராட்சி தி.மு.க., சேர்மன் வேட்பாளர் தீவிர பிரச்சாரம்
நகராட்சி தி.மு.க., சேர்மன் வேட்பாளர் தீவிர பிரச்சாரம்
ADDED : அக் 08, 2011 01:26 AM
நாமக்கல்: நாமக்கல் நகராட்சி தி.மு.க., சேர்மன் வேட்பாளர், 38, 39வது
வார்டில் தனது ஆதரவாளர்களுடன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அவருக்கு,
நகர மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். நாமக்கல் நகராட்சி சேர்மன்
பதவிக்கு, தி.மு.க., சார்பில், அக்கட்சியின் நகரச் செயலாளர் செல்வராஜ்
போட்டியிடுகிறார். அவர், தனது ஆதரவாளர்களுடன், நகராட்சிக்கு உட்பட்ட
வார்டுகளில் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். நேற்று, நகராட்சிக்கு
உட்பட்ட, 38, 39வது வார்டில், தனது ஆதரவாளர்களுடன் பிரச்சாரத்தில்
ஈடுபட்டார். பிரச்சாரத்தின்போது, நகராட்சியில் மேற்கொள்ளப்பட்ட
திட்டப்பணிகளை விளக்கிக் கூறி பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும், வார்டில்
தீர்க்கப்படாத பிரச்னைகள் குறித்து கேட்டறிந்து, அவற்றை களைய சம்மந்தப்பட்ட
அதிகாரிகளிடம் பரிந்துரை செய்து நடவடிக்கை மேற்கொள்வதாகவும்
உறுதியளித்தார். பிரச்சாரத்தில், சேர்மன் வேட்பாளர் செல்வராஜ் உள்ளிட்ட
கட்சியினருக்கு, மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். நகராட்சி, 38, 39வது
வார்டு தி.மு.க., வேட்பாளர்கள் தியாகராஜன், ஈஸ்வரன், நிர்வாகிகள் ராணா
ஆனந்தன், ஆனந்தன், கிளை செயலாளர்கள் கனகராஜ், முரளி, உமாசங்கர் உட்பட
நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.


