/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/யானை புதைத்த இடத்தில் துர்நாற்றத்துக்கு தீர்வு :"தினமலர்' செய்தி எதிரொலியானை புதைத்த இடத்தில் துர்நாற்றத்துக்கு தீர்வு :"தினமலர்' செய்தி எதிரொலி
யானை புதைத்த இடத்தில் துர்நாற்றத்துக்கு தீர்வு :"தினமலர்' செய்தி எதிரொலி
யானை புதைத்த இடத்தில் துர்நாற்றத்துக்கு தீர்வு :"தினமலர்' செய்தி எதிரொலி
யானை புதைத்த இடத்தில் துர்நாற்றத்துக்கு தீர்வு :"தினமலர்' செய்தி எதிரொலி
ADDED : ஜூலை 19, 2011 09:31 PM
பெ.நா.பாளையம் : கோவை அருகே காட்டு யானை புதைக்கப்பட்ட இடத்தில் நாய்கள், பறவைகள் வராமல் இருக்க வனத்துறையினர் மண்ணை குவித்தனர்.
கடந்த வாரம், கோவை - ஆனைகட்டி ரோட்டில் மாங்கரையில் நள்ளிரவில் ஆண் யானைக்கு 'ரேடியோ காலரிங்' கருவியை பொருத்துவதற்காக வனத்துறையினர் மயக்க ஊசி போட்டனர். ஆனால், நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்த யானை, நெஞ்சு மற்றும் நுரையீரலில் அடிபட்டு இறந்தது. வனத்துறையினர் யானையின் உடலை அதே பகுதியில் அவசர, அவசரமாக குழி தோண்டி, அரைகுறையாக புதைத்தனர். பூமி மட்டத்திலிருந்து, சில அடி ஆழத்தில் புதைக்கப்பட்டதால், சில நாட்களிலேயே இறந்த யானையின் உடல் அழுகி, நாற்றமெடுக்க துவங்கி விட்டது. இதனால், அப்பகுதியில் தெருநாய்கள் குவிந்து, இறந்த யானையின் உடலை கடித்துக் குதறின. அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது. இது குறித்து 'தினமலர்' நாளிதழ் நேற்று செய்தி வெளியிட்டது. இதை தொடர்ந்து, காட்டு யானை புதைக்கப்பட்ட இடத்தில், யானையின் அழுகிய உடல் பாகங்களை மறைக்கும் வகையில் மேலும் சில அடி உயரத்துக்கு வனத்துறையினர் மண்ணை குவித்தனர். காட்டு யானை புதைக்கப்பட்ட இடத்தில் பறவைகள் மற்றும் நாய்கள் வராமல் இருக்க மண்ணின் மேற்புறத்தில் கிருமி நாசினி பவுடர் தெளித்தனர். இதனால், கடந்த சில நாட்களாக அப்பகுதியில் வீசி வந்த துர்நாற்றத்துக்கு தீர்வு கிடைத்தது.


