ADDED : செப் 02, 2011 11:06 PM
மடத்துக்குளம் : மடத்துக்குளம்- பழநி வழித்தடத்தில் புறநகர் பஸ்கள் அதிகளவில் இயக்கப்படுகின்றன.
வயலூர், தாளையம், புஷ்பத்தூர் போன்ற கிராமங்களில் புறநகர் பஸ்கள் நிற்பதில்லை. டவுன் பஸ்கள் போதிய அளவு இல்லை. மடத்துக்குளம்-பழநிக்கு இடையிலுள்ள கிராமத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஒரே பஸ்சில் பயணம் செய்ய வேண்டியதுள்ளது. எனவே, இந்த வழித்தடத்தில் மக்கள், மாணவர்கள் நலன் கருதி கூடுதல் பஸ்கள் இயக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


