ADDED : ஆக 26, 2011 12:16 AM
மதுரை : மதுரை கிழக்கு யூனியன் துணை வட்டார வளர்ச்சி அதிகாரி ஜெயசீலன்.
வங்கியில் அடகு வைத்த 14 பவுன் நகையை, டூவீலரில் எடுத்துக் கொண்டு நேற்று காலை வீடு திரும்பினார். செல்லும் வழியில் தல்லாகுளம் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்துவிட்டு திரும்பிய போது, டூவீலரில் இருந்த நகை திருடப்பட்டிருந்தது. தல்லாகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.


