/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/போலீஸாக நடித்து பணம் பறிக்க முயன்ற இருவர் கைதுபோலீஸாக நடித்து பணம் பறிக்க முயன்ற இருவர் கைது
போலீஸாக நடித்து பணம் பறிக்க முயன்ற இருவர் கைது
போலீஸாக நடித்து பணம் பறிக்க முயன்ற இருவர் கைது
போலீஸாக நடித்து பணம் பறிக்க முயன்ற இருவர் கைது
ADDED : ஆக 28, 2011 01:19 AM
பெருந்துறை: போலீஸாக நடித்து பணம் பறிக்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு, புளிக்கரைச் சேர்ந்த செங்கோட்டுவேல் மகன் ஜெகநாதன் (34); லாரி டிரைவர். நேற்று முன்தினம் இவர், லாரியில் லோடு ஏற்றிக் கொண்டு, பெருந்துறை - குன்னத்தூர் ரோட்டில் சென்றுக் கொண்டிருந்தார். பெருந்துறை ஐயப்பன் கோவில் அருகே, பைக்கில் வந்த இருவர், லாரியை ஓரமாக நிறுத்தக் கூறினர். தங்களை போலீஸ் என கூறிக் கொண்டு, பணம் தராவிட்டால் வழக்கு தொடர்வோம் என, கூறியுள்ளனர். அவ்வழியாக வந்த மற்ற லாரி டிரைவர்கள் விசாரிக்கவே, இருவரும் நழுவ முயன்றனர். உடனே, லாரி டிரைவர்கள் பிடித்து பெருந்துறை போலீஸில் ஒப்படைத்தனர்.விசாரணையில், பெருந்துறை, பாலக்கரை, சின்னமன்னாம்பாளையத்தைச் சேர்ந்த பொன்னுசாமி மகன் சுரேஷ்குமார் (27). சுள்ளிபாளையத்தைச் சேர்ந்த பழனிசாமி மகன் சுரேஷ்குமார் (25 ) என்பது தெரியவந்தது. இருவரையும், பெருந்துறை எஸ்.ஐ., ரவி கைது செய்தார்.


