/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பள்ளி பகுதியில் சீறிப்பாயும் வாகனங்கள் :விபத்து அபாயத்தில் மாணவர்கள்பள்ளி பகுதியில் சீறிப்பாயும் வாகனங்கள் :விபத்து அபாயத்தில் மாணவர்கள்
பள்ளி பகுதியில் சீறிப்பாயும் வாகனங்கள் :விபத்து அபாயத்தில் மாணவர்கள்
பள்ளி பகுதியில் சீறிப்பாயும் வாகனங்கள் :விபத்து அபாயத்தில் மாணவர்கள்
பள்ளி பகுதியில் சீறிப்பாயும் வாகனங்கள் :விபத்து அபாயத்தில் மாணவர்கள்
ADDED : ஜூலை 14, 2011 09:40 PM
திருப்பூர் : பள்ளி பகுதிகளில் வேகத்தடை, ஒலி அளவு குறித்த எச்சரிக்கை பலகை
இல்லாததால், வாகனங்கள் அதிவேகமாக பயணிக்கின்றன. நடந்து செல்லும்
மாணவர்கள், சைக்கிளில் பள்ளிக்கு வரும் மாணவர்கள் ரோட்டை கடந்து செல்ல
அச்சப்படுகின்றனர்.இரு சக்கர, நான்குசக்கர வாகன போக்குவரத்தால்,
திருப்பூரில் பெரும்பாலான ரோடுகள் எப்போதும் பரபரப்பாக காணப்படுகின்றன.
வாகன ஓட்டிகளில் பெரும்பாலானோர் போக்குவரத்து விதி முறையை மதிக்காமலேயே
வாகனங்களை இயக்குகின்றனர்.திருப்பூரில் உள்ள பள்ளிகள் முன் எவ்வித
போக்குவரத்து கட்டுப்பாடும், எச்சரிக்கை அறிவிப்பும் வைக்கப்படாமல் உள்ளது.
வேகத்தடை, 'பள்ளி பகுதி; மெதுவாக செல்லவும்' என்பன உள்ளிட்ட அறிவிப்பு
பலகை இல்லாததால், பள்ளி முன் வாகனங்கள் வழக்கமான வேகத்தையே
கடைபிடிக்கின்றன.சீறிப்பாயும் வாகனங்களுக்கு மத்தியில், மாணவர்கள் ரோட்டை
கடந்து செல்ல சிரமப்படுகின்றனர். ரோட்டை கடக்க முற்படும்போது, 'ஹாரன்'களை
அலறவிடுவதால், மாணவர்கள் மிரண்டு ஒதுங்குகின்றனர். பள்ளி முடிந்து
மாணவர்கள் வெளிவரும்போது, முந்தி செல்ல முண்டியடிக்கும் வாகனங்களால்
போக்குவரத்து நெரிசல் ஏற்படு
கிறது; வாகனங்களுக்கு இடையே புகுந்து செல்லும் மாணவர்கள், விபத்தில்
சிக்கிக் கொள்ளும் அவல நிலை உள்ளது. சைக்கிளில் வரும் மாணவர்கள்,
ரோட்டோரத்தில் சைக்கிளை இறக்கி கீழே விழுந்து அடிபடுகின்றனர்.பள்ளி
முன்பகுதியில் மாணவர்கள் பாதுகாப்பு கருதி, வாகன போக்குவரத்தை
கட்டுப்படுத்த, வேகத்தடை, எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். அதிவேக
வாகனங்களை கண்டறிந்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


