/உள்ளூர் செய்திகள்/பெரம்பலூர்/உணவு பொருள் வழங்கல் குறைதீர் நாள் கூட்டம்உணவு பொருள் வழங்கல் குறைதீர் நாள் கூட்டம்
உணவு பொருள் வழங்கல் குறைதீர் நாள் கூட்டம்
உணவு பொருள் வழங்கல் குறைதீர் நாள் கூட்டம்
உணவு பொருள் வழங்கல் குறைதீர் நாள் கூட்டம்
ADDED : ஆக 08, 2011 02:37 AM
பெரம்பலூர்: 'பொது விநியோகத்திட்டத்தின் கீழ் உணவு பொருள் வழங்கல் தொடர்பான குறைதீர்க்கும் கூட்டம் வரும் 12ம் தேதி நடக்கிறது' என மாவட்ட கலெக்டர் தரேஷ்அஹமது தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை: பெரம்பலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு தாலுகாவிலும் ஒரு கிராமத்தில் மாதந்தோறும் பொது விநியோகத்திட்டம் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்ந்த பொது விநியோகத்திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கு பெரம்பலூர் மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமாக ஆகஸ்ட் மாதத்திற்கான பொதுமக்கள் குறைகேட்கும் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பெரம்பலூர் தாலுகாவில் நொச்சியம் கிராமத்திலும், வேப்பந்தட்டை தாலுகாவில் பிரம்மதேசம் கிராமத்திலும், குன்னம் தாலுகாவில் திருமாந்துரை கிராமத்திலும் வரும் 13ம் தேதி காலை 10 மணியளவில் நடக்கிறது. இம்முகாமில் துணை கலெக்டர் நிலையில் உள்ள அலுவலர்கள் கலந்து கொண்டு குறைகளை கேட்டறிந்து களைந்திட ஆணையிடப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு உணவுப்பொருள் வழங்கல் பணியை சீரிய முறையில் செயல்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கலாம்.


