/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ராஜபாளையம் மில்லில் ரூ.30 கோடி லாபம் ராம்கோ குரூப் சேர்மன் தகவல்ராஜபாளையம் மில்லில் ரூ.30 கோடி லாபம் ராம்கோ குரூப் சேர்மன் தகவல்
ராஜபாளையம் மில்லில் ரூ.30 கோடி லாபம் ராம்கோ குரூப் சேர்மன் தகவல்
ராஜபாளையம் மில்லில் ரூ.30 கோடி லாபம் ராம்கோ குரூப் சேர்மன் தகவல்
ராஜபாளையம் மில்லில் ரூ.30 கோடி லாபம் ராம்கோ குரூப் சேர்மன் தகவல்
ADDED : ஆக 03, 2011 11:25 PM
ராஜபாளையம் : ''பவள விழா காணும் ராஜபாளையம் மில்ஸ் , 30 கோடி ரூபாய் நிகர லாபத்துடன் செயல்படுகிறது,'' என, ராம்கோ குரூப் சேர்மன் ராமசுப்பிரமணிய ராஜா கூறினார்.
நிருபர்களிடம் அவர் கூறியதாவது: ஐந்து லட்சம் ரூபாய் முதலீட்டில் ராஜபாளையம் மில் துவங்கி 75 ஆண்டுகள் ஆகிறது. பழைய மில், புதிய மிஷின்களுடன் நவீனமயமாக்கப்பட்டு உள்ளது. தற்போது இங்கு ஒன்றரை லட்சம் 'ஸ்பின்டில்கள்' உள்ளன. மில் துவங்கிய காலத்தில் 2 பேல் நூல் விலை 169 ரூபாய், தற்போது 63 ஆயிரம் ரூபாய். நூல் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்தபோதும், பங்குதாரர்களுக்கு உரிய பணத்தை வழங்கி சாதனை செய்கிறோம். பவளவிழாவை முன்னிட்டு ஒரு ஷேர் வைத்திருப்பவர்களுக்கு மற்றொன்று இலவசமாக தருகிறோம். நூல்களில் 4, 6, 10 வகையை இந்தியாவில் முதன்முதலாக தயாரித்தோம். இங்குள்ள நூல்கள் ஜப்பான், இத்தாலிக்கு ஏற்றுமதியாகிறது. சுவிட்சர்லாந்தில் இருந்து வரவழைக்கப்பட்ட நவீன மிஷின் செயல்பாட்டில் உள்ளது.இந்த மில்லுக்கு மின்சாரம் வந்த பின் தான் ராஜபாளையத்திற்கே மின்சப்ளை கிடைத்தது. முப்பது கோடி ரூபாய் நிகர லாபத்துடன் மில் செயல்படுகிறது. 1994-95ல் 140 கோடி ரூபாயில் காற்றாலை அமைத்து மின்சாரம் பெறுகிறோம். ஊழியர்கள் நலன் முக்கியம் என்பதால், அப்போதைய தொழிலாளர் நல அமைச்சர் வி.வி.கிரியை அழைத்து மில்லை திறந்தோம். இன்றும் பங்குதாரர்கள் மற்றும் ஊழியர் நலன் பாதுகாக்கப்படுகிறது. இது தவிர சிமின்ட் மற்றும் சிமின்ட் ஷீட் உற்பத்தியில் தென்னிந்தியாவில் பெரிய தொழிற்சாலையாக ராம்கோ நிறுவனம் உள்ளது.இதன் பவள விழா நாளை காலை நடக்கிறது. இதன் விழாவில் ஜப்பான் மிட்சுபிஷி நிறுவன டெக்ஸ்டைல் பிரிவு துணைதலைவர் மோரிநோபு ஓபாடா, லஷ்மி மிஷின் ஒர்க்ஸ் நிறுவன மேலாண்மை இயக்குனர் சஞ்சய் ஜெயவர்த்தனவேலு கலந்துகொள்கின்றனர், என்றார்.


