/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ரேஷன் கடைகளில் கம்ப்யூட்டர் ரசீது பா.ஜ., செயலாளர் கோரிக்கைரேஷன் கடைகளில் கம்ப்யூட்டர் ரசீது பா.ஜ., செயலாளர் கோரிக்கை
ரேஷன் கடைகளில் கம்ப்யூட்டர் ரசீது பா.ஜ., செயலாளர் கோரிக்கை
ரேஷன் கடைகளில் கம்ப்யூட்டர் ரசீது பா.ஜ., செயலாளர் கோரிக்கை
ரேஷன் கடைகளில் கம்ப்யூட்டர் ரசீது பா.ஜ., செயலாளர் கோரிக்கை
ADDED : அக் 09, 2011 12:29 AM
புதுச்சேரி : ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு கம்ப்யூட்டர் ரசீது வழங்க வேண்டும் என பா.ஜ., செயலாளர் சாமிநாதன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஏழை மக்களின் வாழ்வு, வறுமை மற்றும் பசியின்மையை போக்க, உணவுப்பொருட்கள், காஸ், மண்ணெண்ணெய் போன்றவற்றிக்காக ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி ரூபாயை, பொது விநியோக திட்டத்திற்காக மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு வழங்குகிறது.
பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அளிக்கும் தொகையில் 30 சதவீதத்திற்கும் மேல் ஊழல் நடைபெறுவதாகவும், ரேஷன் பொருட்கள் கடத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது.இதையடுத்து ”ப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி டி.பி. வாத்வா தலைமையில் கமிட்டி ஒன்றை அமைத்தது. அதில் ஒவ்வொரு மாநிலமும், ஒவ்வொரு மாதிரியான பொது விநியோக திட்டத்தை கடைபிடிப்பதாகவும், இதில் பா.ஜ., ஆட்சி செய்யும் குஜராத் மற்றும் சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் திட்டம் சிறப்பாக உள்ளதாக அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். எனவே அம் மாநிலங்களில் பின்பற்றப்படும் கம்ப்யூட்டர் ரசீது வழங்கும் முறை, திட்டத்தின் மாதிரி ஆகியவற்றைக் கடைபிடிக்க வேண்டும் எனவும் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி உட்பட யூனியன் பிரதேசங்களை வலியுறுத்தியதாகவும் மத்திய உணவு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி புதுச்சேரி அர” தலைமை செயலர் மற்றும் முதல்வர் உடனடியாக அனைத்து ரேஷன் கடைகளிலும் கம்ப்யூட்டர் ரசீது அளித்தால் கடத்தல், பதுக்கல் மற்றும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்று மத்திய உணவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


