/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/தூத்துக்குடியில் முக்கிய ரோட்டில் வேகத்தடை அமைப்புவிபத்தை தடுக்க அதிரடி நடவடிக்கைதூத்துக்குடியில் முக்கிய ரோட்டில் வேகத்தடை அமைப்புவிபத்தை தடுக்க அதிரடி நடவடிக்கை
தூத்துக்குடியில் முக்கிய ரோட்டில் வேகத்தடை அமைப்புவிபத்தை தடுக்க அதிரடி நடவடிக்கை
தூத்துக்குடியில் முக்கிய ரோட்டில் வேகத்தடை அமைப்புவிபத்தை தடுக்க அதிரடி நடவடிக்கை
தூத்துக்குடியில் முக்கிய ரோட்டில் வேகத்தடை அமைப்புவிபத்தை தடுக்க அதிரடி நடவடிக்கை
ADDED : ஜூலை 13, 2011 02:25 AM
தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டத்தில் விபத்தை தடுக்கும் வகையில் பல்வேறு
இடங்களில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் முக்கிய இடங்களில் வேகத்தடை
அமைக்கப்பட்டு வெள்ளை பட்டை அடிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில்
சிகப்பு பிரதிபலிப்பான் அதில் பொறுத்தப்படுகிறது.தூத்துக்குடி மாவட்டத்தில்
விபத்தினை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் செல்வராஜ் அதிரடி
நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இது சம்பந்தமாக போக்குவரத்து அதிகாரிகள்,
போலீஸ் துறையினர் உள்ளிட்டோரை அழைத்து அடிக்கடி கலெக்டர் ஆலோசனை மேற்கொண்டு
வருகிறார்.இதற்கிடையில் முக்கிய இடங்களில் விபத்தை தடுக்கும் வகையில்
வேகத்தடை அமைத்து அதில் வெள்ளை பட்டை அடிக்க வேண்டும் என்றும், இரவில்
வேகத்தடை தெரியும் வகையில் சிகப்பு பிரதிபலிப்பான் அமைக்க வேண்டும் என்று
நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் தங்கவேலிற்கு கலெக்டர் செல்வராஜ்
உத்தரவிட்டார்.கலெக்டர் உத்தரவை தொடர்ந்து கோட்ட பொறியாளர் தங்கவேல்
தலைமையில் தூத்துக்குடி உதவி கோட்ட பொறியாளர் சத்தியமூர்த்தி,
ஓட்டப்பிடாரம் உதவி கோட்ட பொறியாளர் அச்சுதன் மற்றும் ஸ்ரீவைகுண்டம்,
திருச்செந்தூர், கோவில்பட்டி உள்ளிட்ட உதவி கோட்ட பொறியாளர்கள் தங்கள்
பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டிய இடங்களை தேர்வு செய்தனர்.
அந்த இடங்களில்
உடனடியாக வேகத்தடை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வேகத்தடை அமைக்கப்பட்டு
தற்போது அதில் வெள்ளை பட்டை அடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சிகப்பு பிரதிபலிப்பானுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு சில
நாட்களில் அவை வந்துவிடும்.அவை வந்தவுடன் வேகத்தடை அமைக்கப்பட்ட இடத்தில்
இரவில் செல்லும் வாகனங்களுக்கு வேகத்தடை அங்கு உள்ளது என்று தெரியும்
வகையில் சிகப்பு பிரதிபலிப்பான் அமைக்கப்படுகிறது. தற்போது அந்த இடத்தில்
வேகத்தடை உள்ளது என்பதற்கான போர்டும் நெடுஞ்சாலைத்துறை மூலம்
வைக்கப்பட்டிருக்கிறது.தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் முக்கிய
இடங்களில் தற்போது வேகத்தடை அமைக்கப்பட்டு அதில் வெள்ளை பட்டை
அடிக்கப்பட்டு விட்டதால் முக்கிய இடத்தில் வேகமாக வந்து மக்களை பயமுறுத்தி
வந்த வாகனங்கள் தற்போது அந்த இடத்தில் வரும் போது மிக மெதுவாக
வருகிறது.மக்களும் பயம் இல்லாமல் அந்த பகுதியின் ஓரமாக செல்லும் வாய்ப்பு
கிடைத்துள்ளது. இதன் மூலம் விபத்துகளும் குறையும் நிலை உருவாகி இருப்பதால்
பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.திருச்செந்தூர் மெயின் ரோட்டில்
அபிராமிநகர், முக்காணி, பழையகாயல் உள்ளிட்ட சில இடங்களிலும்,
தூத்துக்குடியில் அம்பேத்கார் சிலை, 3ம் கேட், பூபால்ராயபுரம்,
தாளமுத்துநகர், டேவிஸ்புரம், இன்னாசியார்புரம், மாப்பிள்ளையூரணிவிலக்கு
உள்ளிட்ட சில இடங்களிலும் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது.முக்கிய இடங்களில்
பொதுமக்கள் கோரிக்கையை தொடர்ந்து அந்த கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய
கலெக்டர் செல்வராஜிற்கு பொதுமக்கள் தரப்பில் பாராட்டும், நன்றியும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.


