/உள்ளூர் செய்திகள்/மதுரை/காங்., வேட்பாளர்களுக்கு ஆதரவாகவாசன், இளங்கோவன் பிரசாரம்காங்., வேட்பாளர்களுக்கு ஆதரவாகவாசன், இளங்கோவன் பிரசாரம்
காங்., வேட்பாளர்களுக்கு ஆதரவாகவாசன், இளங்கோவன் பிரசாரம்
காங்., வேட்பாளர்களுக்கு ஆதரவாகவாசன், இளங்கோவன் பிரசாரம்
காங்., வேட்பாளர்களுக்கு ஆதரவாகவாசன், இளங்கோவன் பிரசாரம்
ADDED : அக் 07, 2011 02:12 AM
மதுரை:மதுரையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் காங்., மேயர் மற்றும்
கவுன்சிலர் வேட்பாளர்களுக்கு ஆதரவாக நாளை மத்தியமைச்சர் வாசன், நாளை மறு
நாள் முன்னாள் மத்தியமைச்சர் இளங்கோவன் பிரசாரம் செய்கின்றனர்.மதுரையில்
காங்., தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நகர் தலைவர் தெய்வநாயகம்
தலைமையில் நடந்தது. மாநில பொது செயலாளர் ராம்பாபு முன்னிலை வகித்தார்.
அனைத்து கோஷ்டிகளையும் சேர்ந்த நிர்வாகிகள் ராஜேந்திரன், தங்கராஜ், காந்தி,
மலைச்சாமி, கணபதி, மைதீன்பாஷா, சையது பாபு, விஜயராகவன் பங்கேற்றனர்.
ராம்பாபு பேசுகையில், ''மதுரை மாநகராட்சியில் மத்திய அரசின் நேரு தேசிய
புனரமைப்பு திட்டத்தின் கீழ் ஆயிரத்து 700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கிராம ஊராட்சிகளுக்கும் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது. இதை
வேட்பாளர்கள் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். மக்கள் மாற்றத்தை
விரும்புகின்றனர். இளைஞர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்,'' என்றார்.பின்
தேர்தல் பணிக்குழுவினர் நிருபர்களிடம் கூறுகையில், ''மத்தியமைச்சர் வாசன்,
நாளை மாலை ஜெய்ஹிந்துபுரம், புதூர், முனிச்சாலை, ஆரப்பாளையம் பகுதிகளிலும்,
முன்னாள் மத்தியமைச்சர் இளங்கோவன், நாளை மறுநாள் காலை அண்ணாநகர்,
தல்லாகுளம், திருநகர், திருமங்கலத்திலும் பிரசாரம் செய்கின்றனர்,''
என்றனர்.


