/உள்ளூர் செய்திகள்/திருவாரூர்/மன்னார்குடியில் ஸ்டாலின் பிரச்சாரம்மன்னார்குடியில் ஸ்டாலின் பிரச்சாரம்
மன்னார்குடியில் ஸ்டாலின் பிரச்சாரம்
மன்னார்குடியில் ஸ்டாலின் பிரச்சாரம்
மன்னார்குடியில் ஸ்டாலின் பிரச்சாரம்
ADDED : அக் 11, 2011 02:17 AM
மன்னார்குடி: ''உள்ளாட்சி துறையின் கீழ் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம அமைப்புகள் நிறைவு பெற்றது தி.மு.க., ஆட்சியில்தான்,'' என்று ஸ்டாலின் பேசினார்.மன்னார்குடி நகராட்சி தலைவர் வேட்பாளர் மகேஸ்வரி சோழராஜனை ஆதரித்து, கீழப்பாலம் பகுதியில் தி.மு.க., பொருளாளரும், முன்னாள் துணை முதல்வருமான ஸ்டாலின் பேசியதாவது:மன்னார்குடி நகராட்சி சேர்மன் பதவிக்கு மகேஸ்வரி போட்டியிடுகிறார்.
அதே போல 33 வார்டுகளிலும் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும். இரண்டு உரிமைகளோடு உங்களை சந்தித்து வாக்கு கேட்க வந்துள்ளேன். மன்னை பிறந்த மண் என்பது ஒரு காரணம். மற்றொன்று, கடந்த 5 ஆண்டு கால தி.மு.க., ஆட்சியில் உள்ளாட்சித்துறை என்னிடம் இருந்தது. அப்போது மாநகராட்சி முதல் கிராம பஞ்சாயத்து வரை உள்ளவற்றுக்கு உள்ளாட்சித்துறை மூலம் 20 லட்ச ரூபாயும், மத்திய மாநில சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை போன்ற துறைகள் மூலம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வழங்கப்பட்டு முழு நிறைவான உள்ளாட்சி நிர்வாகமாக மாற்றியிருந்தோம். அதன் அடிப்படையில் உங்களிடம் ஓட்டு கேட்க வந்துள்ளேன். கூட்டணி கட்சிகளின் துணையால்தான் ஜெயலலிதா ஆட்சி அமைத்தார். அதை மறந்து விட்டு இன்று கூட்டணியை கலைத்து , அவர்களையும் அவமானப்படுத்தி விட்டார். நம்முடன் கம்யூனிஸ்ட்கள் இருந்த போது அவர்களுக்கு கொடுத்த மரியாதை, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிய விதம் போன்றவற்றை அவர்கள் நினைத்துப்பார்க்க வேண்டும். அவர்களை அவமானப்படுத்த கூறவில்லை. வருத்தத்தோடு கூறுகிறேன். மகேஸ்வரிக்கும், 33 வார்டு உறுப்பினர்களுக்கும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, ஆணவம் பிடித்த ஜெயலலிதாவுக்கு புத்தி புகட்ட வேண்டும்.இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.


