ADDED : செப் 03, 2011 12:14 AM
தர்மபுரி: 'தர்மபுரி மாவட்டத்தில் மஹாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணிபுரிவோர் மரக்கன்றுகளை நட்டு பாராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என திப்பம்பட்டியை சேர்ந்த விவசாயி சுந்தரம், கலெக்டருக்கு மனு கொடுத்துள்ளார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: மஹாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் மூலம் நமது மாவட்டத்தில் பல பணிகள் செய்யப்பட்டு வருகிறது.
இப்பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு தற்போது வேலையில்லாமல் உள்ளனர். தொழிலாளர்களுக்கு வேலை வழங்கிடும் வகையில் அரசு நிலங்களில் ஆற்று புறம்போக்கு நிலங்களில் பலன் தரும் மரங்களை நட்டு பாராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் பலன் தரும் மரங்கள் அதிக அளவில் வளர்க்கும் வாய்ப்பு ஏற்படும். இது குறித்து உரிய பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


