/உள்ளூர் செய்திகள்/தேனி/வைகை அணையில் இருந்து தேனி குடிநீருக்கு பரிந்துரைவைகை அணையில் இருந்து தேனி குடிநீருக்கு பரிந்துரை
வைகை அணையில் இருந்து தேனி குடிநீருக்கு பரிந்துரை
வைகை அணையில் இருந்து தேனி குடிநீருக்கு பரிந்துரை
வைகை அணையில் இருந்து தேனி குடிநீருக்கு பரிந்துரை
ADDED : ஜூலை 25, 2011 10:28 PM
தேனி : வைகை அணையில் இருந்து தேனிக்கு குடிநீர் வழங்குவதற்கான திட்டத்திற்கு நீரேற்று நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்வதற்கான சர்வே நடந்தது.
தேனி அல்லிநகரம் நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. குன்னூர், அரப்படித்தேவன்பட்டியில் ஆற்றில் உறைகிணறுகள் அமைத்து குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இது பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப போதுமானதாக இல்லை. இதனால் வைகை அணையில் இருந்து குடிநீர் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக உள்ளது. கடந்த ஆட்சியில் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பின் மதுரை மண்டல முதன்மை பொறியாளர் பரிந்துரை செய்துள்ளார். வைகை அணை பிக்அப் டேமில் இருந்து 25 மில்லியன் லிட்டர் குடிநீர் எடுக்கும் வகையில், திட்டத்தை நீர் பயன்பாட்டுக்குழு அனுமதிக்கு அனுப்பி வைத்துள்ளனர். நேற்று தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரிய திட்ட உருவாக்க உபகோட்ட பொறியாளர்கள், வைகை அணை பிக்அப் டேம் பகுதியில் இருந்து ஒன்றரை கி.மீ., தூரத்தில் நீரேற்றும் நிலையம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்ய சர்வே பணியில் ஈடுபட்டனர்.


