/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்எம்.எல்.ஏ.,க்களுக்கு அமைச்சர் பதில்கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்எம்.எல்.ஏ.,க்களுக்கு அமைச்சர் பதில்
கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்எம்.எல்.ஏ.,க்களுக்கு அமைச்சர் பதில்
கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்எம்.எல்.ஏ.,க்களுக்கு அமைச்சர் பதில்
கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்எம்.எல்.ஏ.,க்களுக்கு அமைச்சர் பதில்
ADDED : செப் 15, 2011 04:21 AM
புதுச்சேரி:எம்.எல்.ஏ.,க்கள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என
அமைச்சர் கல்யாணசுந்தரம் பேசினார்.மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதில்
அளித்து அமைச்சர் கல்யாணசுந்தரம் பேசுகையில், 'புதுச்சேரி மாநிலத்தை
முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் வகையில் உறுப்பினர்கள் தங்களது
கருத்துக்களை கூறினீர்கள். நீங்கள் வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.
கல்வித் துறை தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளைக் கூறினீர்கள். ஆசிரியர்
பற்றாக்குறை, அரசு உதவி பெறும் தனியார் பள்ளி குறித்து பல கருத்துக்களைத்
தெரிவித்துள்ளீர்கள். இது தொடர்பாக முதல்வரிடம் கலந்து பேசி நடவடிக்கை
எடுக்கப்படும்' என்றார்.
ஓம் சக்தி சேகர்: அமைச்சர் பேசியதில் எந்த ஆக்கப்பூர்வமான பதிலும்,
அறிவிப்பும் கிடையாது. நாங்கள் இவ்வளவு நேரம் பல்வேறு கோரிக்கைகளை முன்
வைத்தோம். ஆனால் எந்த பதிலும் கிடையாதே.முதல்வர் ரங்கசாமி: அதிக
கோரிக்கைகளை கூறியுள்ளீர்கள். இவை அனைத்தும் கருத்தில் எடுத்துக் கொண்டு
நடவடிக்கை எடுக்கப்படும்.மானியக் கோரிக்கை விவாதத்திற்கு அமைச்சர்
சந்திரகாசு பதிலளித்து பேசுகையில், 'எம்.எல். ஏ.,க்கள் நல்ல கருத்துக்களை
கூறியுள்ளனர். தற்போதைய சூழ்நிலைக்கு எதுவும் அறிவிக்க முடியாது. வரும்
காலத்தில் அவர்களின் கருத்துக்களை ஆராய்ந்து பணிகளை செய்வோம்' என்றார்.


