பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி முகாம்
பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி முகாம்
பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி முகாம்
ADDED : ஆக 03, 2011 12:52 AM
திருப்பரங்குன்றம் : மதுரை பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி என்.எஸ்.எஸ்., சார்பில் ஏழை பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி, மணவர்களுக்கு இலவச சீருடை, வீட்டுக்கு ஒரு மரக்கன்று வழங்கும் விழா நடந்தது.
திருப்பரங்குன்றம் அருகேயுள்ள வேடர் புளியங்குளம் கிராமத்தை மன்னர் கல்லூரி தத்தெடுத்துள்ளது. அங்குள்ள ஏழை மக்கள், மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. பெண்களுக்கு தையல் பயிற்சி அளித்து அவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் நேற்று முகாம் துவங்கியது. திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ., ராஜா தலைமை வகித்து துவக்கி வைத்தார். கல்லூரி
முதல்வர் நேரு, ஊராட்சி தலைவர் ராஜாத்தி, உபதலைவர் முத்துகிருஷ்ணன்,என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர்கள் சக்திவேல், பாலகுமார், ராமசுப்பையா உட்பட பலர் பங்கேற்றனர். 200 மாணவர்களுக்கு சீருடை வழங்கப்பட்டன.


