Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/கனரக ஓட்டுனர் பயிற்சியில் சேர நேர்காணல் அழைப்பு

கனரக ஓட்டுனர் பயிற்சியில் சேர நேர்காணல் அழைப்பு

கனரக ஓட்டுனர் பயிற்சியில் சேர நேர்காணல் அழைப்பு

கனரக ஓட்டுனர் பயிற்சியில் சேர நேர்காணல் அழைப்பு

ADDED : ஆக 27, 2011 11:57 PM


Google News

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தாட்கோ மூலம் வழங்கப்படும் கனரக வாகன ஓட்டுனர் பயிற்சியில் சேர்வதற்கான நேர்காணல் ஆகஸ்ட் 30ம் தேதி நடக்கிறது.

கலெக்டர் மகேஸ்வரன் வெளியிட்ட அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய ஆதி திராவிட கிருத்துவர்களுக்கு கனரக வாகன ஓட்டுனர் பயிற்சி தாட்கோ மூலம் இலவசமாக அரசு போக்குவரத்து நிறுவன ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் வழங்கப்படவுள்ளது. பயிற்ச்சியில் சேர விரும்புவோர் 2011 ஆகஸ்ட் 20ம் தேதி அன்று 20 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். 159.5 செ.மீட்டர் உயரம், குறைந்த பட்சம் 50 கிலோ எடை இருக்க வேண்டும். 2011 ஆகஸ்ட் 20ம் தேதியன்று இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற்று ஓராண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும். பி.எஸ்.வி.,பேட்ஜ் பதியப்பெற்றிருக்க வேண்டும். அங்க அசைவில் குறைபாடு இன்றியும், நீண்ட நாள் நோய்வாய்ப்பட்டிருக்காமலும் இருக்க வேண்டும். கண்ணாடி அணியாமல் கண் பார்வைதிறன் நன்றாக இருத்தல் வேண்டும். நிறபேதமறியும் குறைபாடு இல்லாமல் இருக்க வேண்டும். தகுதியானவர்கள் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தாட்கோ மேலாளர் அலுவலகத்தில் ஆகஸ்ட் 30ம் தேதி தேதி காலை 11 மணிக்கு நடக்கும் நேர்காணலில் உரிய ஆவணங்களுடன் கலந்து கொள்ள வேண்டும்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us