/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/வீடுகளில் கட்டாயம் கழிப்பறை கட்ட கிராம சபாவில் வேண்டுகோள்வீடுகளில் கட்டாயம் கழிப்பறை கட்ட கிராம சபாவில் வேண்டுகோள்
வீடுகளில் கட்டாயம் கழிப்பறை கட்ட கிராம சபாவில் வேண்டுகோள்
வீடுகளில் கட்டாயம் கழிப்பறை கட்ட கிராம சபாவில் வேண்டுகோள்
வீடுகளில் கட்டாயம் கழிப்பறை கட்ட கிராம சபாவில் வேண்டுகோள்
ADDED : ஜூலை 28, 2011 01:55 AM
கிருஷ்ணகிரி: 'கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து வீடுகளிலும் கட்டாயமாக கழிப்பறை கட்ட வேண்டும்' என கிராம சபா கூட்டத்தில் கலெக்டர் வேண்டுகோள் விடுத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 337 பஞ்சாயத்துகளிலும் கிராம சபா கூட்டம் நடந்தது. காவேரிப்பட்டணம் யூனியன் கால்வேஅள்ளியில் பஞ்சாயத்து தலைவர் பூபாலன் தலைமையில் நடந்த கிராம சபை கூட்டத்தை கலெக்டர் மகேஸ்வரன் பார்வையிட்டு வளர்ச்சி பணிகள் குறித்து கேட்டறிந்தார். கூட்டத்தில் கலெக்டர் பேசியது: கால்வேஅள்ளி பஞ்சாயத்தில் உள்ள 41 கைப்பம்புகளில் ஒன்று மட்டும் பழுதடைந்துள்ளது. இதை சரி செய்து மக்களின் பயன்பாட்டுக்கு வழங்கப்படும். அனைத்து குடிநீர் தொட்டிகளும் அவ்வப்போது சுத்தம் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கப்பட வேண்டும். தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்ட நாள் தொட்டிகளில் எழுதப்படவேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டம் கல்வி அறிவு பெற்று வளர்ச்சி பெற்று வருகிறது. இளைய தலைமுறையினர் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வாழ அவர்களுக்கு பெற்றோர்கள் கற்று தரவேண்டும். சுகாதாரமாக வாழ அனைத்து வீடுகளிலும் கட்டாயம் கழிப்பறை கட்ட வேண்டும். கழிப்பறை கட்டுவதற்கான பண உதவியை ஊரக வளர்ச்சி துறை செய்து தருகிறது. இதனை பயன்படுத்தி கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் கழிப்பறை கட்ட வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார். உதவி இயக்குனர் (பஞ்.,) வீரபத்திரன், உதவி திட்ட அலுவலர் குற்றாலம்பிள்ளை, பி.டி.ஓ.,க்கள் சென்னியப்பன், லட்சுமணன், துணை பி.டி.ஓ.,க்கள்சீனிவாசன், ராமமூர்த்தி, உதவி பொறியாளர் எத்திராஜ் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


