/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/விரிவாக்கப்பட்ட எல்லைக்குள் புது பஸ் ஸ்டாண்ட்: கலெக்டர் தகவல்விரிவாக்கப்பட்ட எல்லைக்குள் புது பஸ் ஸ்டாண்ட்: கலெக்டர் தகவல்
விரிவாக்கப்பட்ட எல்லைக்குள் புது பஸ் ஸ்டாண்ட்: கலெக்டர் தகவல்
விரிவாக்கப்பட்ட எல்லைக்குள் புது பஸ் ஸ்டாண்ட்: கலெக்டர் தகவல்
விரிவாக்கப்பட்ட எல்லைக்குள் புது பஸ் ஸ்டாண்ட்: கலெக்டர் தகவல்
நாமக்கல்: 'புதிய பஸ் ஸ்டாண்ட், விரிவாக்கப்பட்ட நகர எல்லைக்குள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது' என, மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
பஸ் ஸ்டாண்ட் இடமாற்றம் தொடர்பாக, மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில், ஏ.எஸ்.பி., நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர், நகராட்சிக் கமிஷனர், லாரி, பஸ் உரிமையாளர்கள் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. புதிய பஸ் ஸ்டாண்ட், விரிவாக்கப்பட்ட நகர எல்லைக்குள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருச்சி சாலையில், பயணியர் மாளிகை, ஆர்.டி.ஓ., குடியிருப்பு பகுதியில், 20 மீட்டர் அகலத்தில், 36 லட்சம் ரூபாய் மதிப்பில் சாலை அகலப்படுத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக, மரம், மின்கம்பங்கள், தொலைத் தொடர்பு சாதனங்கள் அப்புறப்படுத்தவும், மாற்றியமைப்பதற்கான பணிகள் விரைவில் துவங்கப்படும்.
நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு, மணல் லாரிகளே காரணமாகும். திருச்சியிலிருந்து வரும் லாரிகளை வளையப்பட்டியிலும், சேலத்திலிருந்து வரும் லாரிகளை, புதன்சந்தையிலும் மாற்றி அமைக்க ஏதுவாக புதன்சந்தை, சேந்தமங்கலம், வடுகப்பட்டி, பழையபாளையம், அலங்காநத்தம், காளிசெட்டிபட்டி, வளையப்பட்டி வரையிலான சாலையை, 16 கி.மீ., தூரத்துக்கு அகலப்படுத்தவும், மேம்பாடு செய்யவும், 9 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீடு செய்து அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அரசு உத்தரவு எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இச்சாலை திட்டப்பணிகள் நிறைவு பெற்றால், நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசல் வெகுவாகக் குறையும். ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட இடத்தில், ஆட்டோ நகர் அமைக்கவும், பணிமனைகள் இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


