/உள்ளூர் செய்திகள்/கரூர்/உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள்கலெக்டரிடம் கோரிக்கை மனு வழங்கல்உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள்கலெக்டரிடம் கோரிக்கை மனு வழங்கல்
உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள்கலெக்டரிடம் கோரிக்கை மனு வழங்கல்
உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள்கலெக்டரிடம் கோரிக்கை மனு வழங்கல்
உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள்கலெக்டரிடம் கோரிக்கை மனு வழங்கல்
ADDED : ஆக 12, 2011 11:07 PM
கரூர்: தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் முடிவடையும் நாள்
நெருங்குவதால் பிரதிநிதிகள் தங்கள் பகுதி குறைகளை மாவட்ட கலெக்டரிடம்
மனுவாக அளித்து வருகின்றனர்.தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, டவுன்
பஞ்சாயத்து, கிராம பஞ்சாயத்து மற்றும் மாவட்ட பஞ்சாயத்துகளின் பதவி காலம்
வரும் அக்டோபர் 26 ம் தேதியுடன் முடிகிறது. சட்டசபை கூட்டத்தொடருக்கு பிறகு
உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது. இதனால்
உள்ளாட்சி அமைப்புகளில் இன்னும் ஒரு சில கூட்டங்களே நடக்க
வாய்ப்புண்டு.உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் முடிவடையும் நாள்
நெருங்குவதாலும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாலும், உள்ளாட்சி அமைப்பு
தலைவர்களால் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது. இதனால் உள்ளாட்சி அமைப்புகளில்
கவுன்சிலர்களாக பதவியில் உள்ளவர்கள், அவர்களது பகுதியில் உள்ள குறைகளை
மாவட்ட கலெக்டர்களிடம் தெரிவித்து தீர்வு காண முயற்சி செய்து வருகின்றனர்.
மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமை நடக்கும்
குறைதீர்ப்பு முகாமில், கடந்த ஒரு மாத காலமாக ஏராளமான உள்ளாட்சி
பிரதிநிதிகளை மனுக்களோடு காண முடிகிறது.
கரூரை அடுத்த தாந்தோணி நகராட்சி 10 வது வார்டு கவுன்சிலர் பாபுகுமார், '
அவரது வார்டில் உள்ள சிறுவர் பூங்காவை பராமரிக்க கோரியும், அந்த பகுதியில்
உள்ள நகராட்சிக்கு சொந்தமான விளையாட்டு மைதானங்களை சீரமைக்ககோரியும்,
மாவட்ட கலெக்டர் ÷ஷாபனாவிடம் மனு கொடுத்தார். அதே போல் புலியூர் டவுன்
பஞ்சாயத்து 12 வது வார்டு கவுன்சிலர் பெருமாள், 'அவரது வார்டில் உள்ள
மூன்று ரேசன் கடைகளையும் வாரம் முழுவதும் திறந்து வைத்து பொருட்கள் விற்பனை
செய்ய உத்தரவிடுமாறு' கலெக்டர் ÷ஷாபனாவிடம் மனு கொடுத்தார்.முன்னதாக,
கடந்த மாதம் ஒரு கோடியே 45 லட்ச ரூபாய் மதிப்பில் புதியதாக கட்டப்பட்ட
கரூர் நகராட்சி கட்டிடத்தை திறக்க, தி.மு.க., வை சேர்ந்த நகராட்சி தலைவர்
சிவகாம சுந்தரி உள்ளிட்ட தி.மு.க., காங்., கவுன்சிலர்கள், கலெக்டர்
÷ஷாபனாவிடம் மனு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.


