Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/பால் கூட்டுறவு சங்கசெயலாளர்கள் கூட்டம்

பால் கூட்டுறவு சங்கசெயலாளர்கள் கூட்டம்

பால் கூட்டுறவு சங்கசெயலாளர்கள் கூட்டம்

பால் கூட்டுறவு சங்கசெயலாளர்கள் கூட்டம்

ADDED : செப் 08, 2011 01:23 AM


Google News
தர்மபுரி:தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அனைத்து பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க செயலாளர்கள் கூட்டம் நடந்தது.கலெக்டர் லில்லி தலைமை வகித்தார். துணை பதிவாளர் (பால்வளம்) ராமச்சந்திரன் வரவேற்றார். ஒன்றிய துணை பொது மோலளர் (பால் உற்பத்தி) மகாதேவன் முன்னிலை வகித்தார்.

கலெக்டர் லில்லி பேசுகையில்,'' தர்மபுரி மாவட்டத்தில் அரசு நிர்ணயித்த பால் உற்பத்தி குறியீட்டை முழுமையாக எய்துவதற்காக பால் உற்பத்தியை பெருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பால் விற்பனையை தனியாருக்கு விற்பனை செய்வதை தவிர்த்து பால் முழுவதும் கூட்டுறவு ஒன்றியத்துக்கு அனுப்ப வேண்டும்,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us