ADDED : அக் 11, 2011 02:11 AM
ஸ்ரீபெரும்புதூர் : ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் உட்கோட்டம் சார்பில், உள்ளாட்சி தேர்தலையொட்டி, அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.
ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். ஒரகடம் இன்ஸ்பெக்டர் தங்கவேலு, மணிமங்கலம் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டி.எஸ்.பி., கஜேந்திரகுமார் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து விளக்கினார். தேர்தல் விதிமுறைகள் குறித்த கையேடு, கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கப்பட்டது. கூட்டத்தில் அனைத்து கட்சி பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.


