Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 3ம் கட்ட பயிற்சி

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 3ம் கட்ட பயிற்சி

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 3ம் கட்ட பயிற்சி

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 3ம் கட்ட பயிற்சி

ADDED : அக் 14, 2011 01:40 AM


Google News
எட்டயபுரம்: எட்டயபுரத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு மூன்றாம் கட்ட பயிற்சி முகாம் நடந்தது.எட்டயபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளியில் நடந்த பயிற்சி முகாமில் எட்டயபுரம், விளாத்திகுளம் புதூர் (வி) டவுன் பஞ்., தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சுப்பிரமணியன், முருகேசன், எட்வின் ஜோஸ் ஆகியோர் பயிற்சியளித்தனர். இந்த பயிற்சி முகாமில் வாக்குச்சாவடிகள் எப்படி அமைப்பது, வேட்பாளர் முகவர்கள் வாக்கு பதிவு நாள் அன்று காலை 6.00மணிக்கு வரவழைத்து அவர்களுக்கு முன் மாதிரி வாக்குப்பதிவு கட்டாயம் நடத்தி காண்பிக்க வேண்டும். காலை 7 மணிக்கு தவறாமல் வாக்குப்பதிவை துவங்க வேண்டும்.

வாக்குப்பதிவு அலுவலர்களின் பணிகள் பற்றி விவரமாக பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியில் தபால் வாக்கு தொடர்பாக படிவம் 15 மற்றும் 16 வழங்கப்பட்டது. தபால் வாக்கு அளிக்கும் பொழுது தவறாமல் படிவம் 17 ஐ பூர்த்தி செய்து கையொப்பமிட்டு வாக்குச் சீட்டுடன் இணைத்து வாக்களிக்க நினைவூட்டப்பட்டது. படிவம் 17 இணைக்கப்படவில்லையென்றால் செல்லாத வாக்கு ஆகிவிடும் என்ற விபரம் தெரிவிக்கப்பட்டது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் கையாளுவது குறித்தும் வாக்குச்சாவடி எவ்வாறு அமைக்க வேண்டும் என்றும் மாதிரி வாக்குச்சாவடி அமைத்து பயிற்சி அளிக்கப்பட்டது. ஏற்பாடுகளை எட்டயபுரம் டவுன் பஞ்., உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ராஜாமுத்து, மணிகண்டன், ஜோதிபாசு ஆகியோர் செய்திருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us