ADDED : செப் 01, 2011 10:26 PM
புதுடில்லி:காஷ்மீர் எல்லையில், பாகிஸ்தானிய படைகளுக்கும், இந்திய வீரர்களுக்கும் இடையே நடந்த சண்டையில், நான்கு பேர் பலியாயினர்.இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே, எல்லை புற சண்டை நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ள நிலையில், இந்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் அடிக்கடி மீறி வருகிறது.
காஷ்மீரில் குப்வாரா மாவட்டம் கெரன் பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது, பாகிஸ்தானிய படைகள் நேற்று தாக்குதல் நடத்தின. இதற்கு ராணுவ தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. இரு தரப்புக்கும் இடையே, 50 நிமிடங்கள் சண்டை நடந்தது. இதில் ராணுவ அதிகாரி குருதயால் சிங் பலியானார். பாகிஸ்தானிய தரப்பில், மூன்று பேர் பலியானார்கள்.பாகிஸ்தானிய பயங்கரவாதிகள், ஊடுருவல் நடத்த உதவி செய்யவே, அந்நாட்டு ராணுவம், இந்திய எல்லை பகுதிகளில், தாக்குதல் நடத்துவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


